உயிரைக் கொடுத்த தோழர் வேலுசாமி எழுப்பிய பிரச்சனை தீர்க்கப் போராடுவோம்! - அ.ர.பாபு
9 Mar 2026, 4:24 pm
<p><strong>உயிரைக் கொடுத்த தோழர் வேலுசாமி எழுப்பிய பிரச்சனை தீர்க்கப் போராடுவோம்!</strong></p>
<p>ஒருபுறம் உழைப்பால் உயர்ந்து நிற்கும் விசைத் தறி கூடங்கள், மறுபுறம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைத் தொழிலாளர்கள். இந்த முரண்பட்ட வாழ்க்கைக்கு நடுவே, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர்நீத்த ஒரு தியாகியின் நினைவலைகளும், இன்று வயிற்றுப் பிழைப்புக்காகத் தங்களின் உடல் உறுப்புகளையே விற்கும் அவலமும் நாமக்கல் மாவட்டத்தின் நிலப்பரப்பை ஒரு பெரும் துயரக்களமாக மாற்றி யிருக்கிறது. காவல் நிலைய வாசலில் ஒரு தியாகம் சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2010-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி, பள்ளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு துணிச்சலான குரல் நிரந்தரமாக மவுனிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் தோழர் வேலுசாமி, கந்துவட்டி கும்பலின் அராஜகத்திற்கு எதிராகத் தனிமனிதராக நின்று போரிட்டவர். வட்டிப் பணம் கட்ட முடியாத ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, அதைச் சமூக வலை தளங்களில் பரப்பிய கந்துவட்டிக் கும்பலின் கொடூரத்தை எதிர்த்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு வந்த கொலை மிரட்டல்களையும் பொருட்படுத்தா மல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கப் போராடிய அந்த மக்கள் தொண்டர், காவல் நிலைய வாசலிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 12 ஆண்டு கால நீண்ட சட்டப் போராட்டத் திற்குப் பிறகு, 2022-இல் குற்றவாளி களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், வேலுசாமி எதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த ‘கந்துவட்டி’ எனும் கொடுமை இன்னும் ஒழியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கந்துவட்டியிலிருந்து சிறுநீரக விற்பனை வரை தோழர் வேலுசாமி மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர்களின் நிலை மாற வில்லை; மாறாக மோசமடைந்திருக் கிறது. அன்று கந்துவட்டிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர், இன்று வறுமை யின் உச்சகட்டமாகத் தங்களின் சிறுநீரகத்தையே (கிட்னி) விற்கும் நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப் பட்டிருப்பது சமூகத்தின் மனசாட்சி யை உலுக்குகிறது. விசைத்தறித் தொழில் நலிவடைந்து வரும் நிலை யில், போதிய வருமானம் இன்றி கடனாளிகளாகும் தொழிலாளர் களைக் குறிவைத்து சமூக விரோதக் கும்பல்கள் இயங்கி வருகின்றன. வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல், தங்கள் உடலின் ஒரு பகுதியை விற்று குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் இந்த அவலம், நாம் இன்னும் இருண்ட காலத்திலேயே இருப்பதைக் காட்டு கிறது. கந்துவட்டி கொடுமை ஒருபுறம் என்றால், உடல் உறுப்பு வணிகம் மறுபுறம் என தொழிலாளர்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு வருகிறது. தீர்வு என்ன? தோழர் வேலுசாமி போன்ற தியாகிகள் சிந்திய ரத்தம் வீணாகப் போகக் கூடாது; நாமக்கல் மாவட்டத்தில் பரவி வரும் சிறுநீரக வணிகம் மற்றும் கந்துவட்டி கும்பல்களைக் கண்ட றிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தனிப் படை அமைக்கப்பட வேண்டும். நலி வடைந்து வரும் விசைத்தறித் தொழி லை மீட்டெடுத்து, தொழிலாளர் களுக்கு முறையான ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். ஏழைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்காமல் இருக்க, கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிமையான முறையில் வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கத்திற்கு தரமான கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வ தன் மூலமே இத்தகைய சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். தோழர் வேலுசாமி அன்று சிந்திய ரத்தம், அநீதிக்கு எதிரான ஒரு போராட்டத்தின் தொடக்கம். இன்று உடல் உறுப்புகளை விற்கும் நிலை க்குத் தள்ளப்பட்டுள்ள தொழிலா ளர்களின் கண்ணீர், அரசின் கவ னத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உழைக்கும் மக்கள் கண்ணியமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வதே வேலுசாமி போன்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.</p>
