விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!
1 Apr 2026, 4:02 pm
<p><strong>விவசாயிகளுக்கு விரோதமான பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்போம்!</strong></p>
<p>சென்னை, ஏப்.1 - விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைத் தொடர்ந்து அமல்ப டுத்தி வரும் பாஜக மற்றும் அதற்குத் துணை நிற்கும் அதிமுக கூட்டணி யைப் புறக்கணித்து, திமுக-இடது சாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத அரசிய லைப் பயன்படுத்தி மதரீதியாக மக்க ளைப் பிளவுபடுத்தும் வேலையைப் பாரதிய ஜனதா கட்சி செய்து வரு கிறது. இத்தகைய பிரிவினைவாத அரசியலை அதிமுக முழுமையாக ஆதரிப்பதோடு, அரசியல் ரீதியாக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் சுவாமிநாதன் குழு பரிந்துரைப் படி, உற்பத்திச் செலவுடன் 50 சத வீதத்தைக் கூடுதலாகச் சேர்த்து விவ சாயிகளுக்கு விலை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அளித்த வாக்கு றுதி, கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த மத்தியச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. இதன் விளைவாக, இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கார்ப்பரேட் வேட்டைக்காடு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வேளாண் கொள்கைகளை அமல் படுத்துகின்றனர். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பால் பொருட்கள், பருத்தி, மக்காச் சோளம் உள்ளிட்டவற்றை ஒரு பைசா கூட இறக்குமதி வரி இன்றி இறக்கு மதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய வேளாண் சந்தையைப் பன்னாட்டு நிறுவ னங்களின் வேட்டைக்காடாக மாற்றும் செயலாகும். புதிய விதைச் சட்டத்தின் மூலம் இந்திய விதைச் சந்தை முழு வதும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும் அபா யம் ஏற்பட்டுள்ளது. பறிபோகும் இலவச மின்சாரம் ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் 2026 மின்சார மசோதா சட்டமாக்கப்பட்டால், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயி கள் அனுபவித்து வரும் இலவச மின்சா ரம் பறிக்கப்படும். விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய சட்டங்களை அதிமுக ஒருபோதும் நாடாளுமன்றத்தில் தட்டிக் கேட்க வில்லை; மாறாக அவற்றுக்கு ஆதர வாகவே செயல்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, மாநில உரிமை கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திட, வரும் சட்டமன்றத் தேர்த லில் பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணிக்கு வாக்களிக்குமாறு விவசாயி கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>
