தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு

15 Feb 2026, 3:03 pm
மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு
<p><strong>மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு</strong></p> <p>புதுதில்லி மோடி அரசு அமெரிக்கா விடம் சரணடைந் &nbsp;ததை அம்பலப் படுத்த அணி திரள்வோம் என &nbsp;ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: வர்த்தக ஒப்பந்தம் மூலமாக மோடி அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துள்ளது. அமெரிக்காவுட னான வர்த்தக ஒப்பந்தம் இறுதி &nbsp;செய்யப்படும்போது, &ldquo;அமெரிக்கா விலிருந்து மூலப்பொருட்களை வாங்கினால், இந்தியாவிற்கும் பூஜ்ஜிய வரி ஏற்றுமதி வசதி கிடைக் &nbsp;கும்&rdquo; என்று ஒன்றிய வர்த்தக &nbsp;அமைச்சர் பியூஷ் கோயல் அறி வித்துள்ளதற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேஎம்) கடும் &nbsp;கண்டனம் தெரிவிக்கிறது. இந்த &nbsp;அறிவிப்பானது, இந்தியாவின் சுய சார்பு மற்றும் இறையாண்மையை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைப்பதன் அப்பட்டமான உண்மையாகும். எல்லாம் பொய் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் &nbsp;தில் விவசாயத் துறை சேர்க்கப்பட வில்லை என்று ஒன்றிய அரசு கூறி &nbsp;வந்தது. ஆனால் அமைச்சர் கோய லின் அறிவிப்பு, மோடி அரசின் கூற்று பொய் என்பதையும், மக்க ளைத் திசைதிருப்பும் முயற்சி என்ப தையும் நிரூபிக்கிறது. மோடி அரசு &nbsp;கையெழுத்திட்டுள்ள இந்த &lsquo;தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் &nbsp;(FTAs)&rsquo; இந்தியாவின் பொருளா தார காலனித்துவத்திற்கான ஒரு &nbsp;புதிய வரைபடமாக அமைகிறது. &nbsp;இந்தியாவை அமெரிக்கப் பொருட் களின் குப்பைத் தொட்டியாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காடாகவும் மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அடிமாட்டு விலை பூஜ்ஜிய வரி விகிதத்தில் கச்சா &nbsp;பருத்தியை இறக்குமதி செய்வது உள்நாட்டு விலையைக் குறைத்து, இந்திய பருத்தி விவசாயிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கும். 2025-ஆம் ஆண்டு காரிப் (Kharif) பரு வப் பயிர்களுக்கான கணக்கீட்டின் &nbsp;படி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு &nbsp;பரிந்துரைத்த C2 + 50\% சூத்தி ரப்படி (சாகுபடிச் செலவு, குடும்ப &nbsp;உழைப்பு, நிலத்தின் வாடகை மற்றும் முதலீட்டிற்கான வட்டி &nbsp;ஆகிய அனைத்தையும் உள்ளடக் கிய விரிவான செலவுடன் 50 சதவீத &nbsp;லாபம்) பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,075 ஆக இருக்க வேண்டும். ஆனால், விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணை யம் (சிஏசிபி), வெறும் A2 + FL &nbsp;அடிப்படையில் (விவசாயி நேரடி யாகச் செய்த செலவு மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு மட்டுமே) குவிண்டாலுக்கு ரூ.7,710 மட்டுமே அறிவித்துள்ளது. இது விரிவான செலவு கணக்கீட்டு முறையான C2 சூத்திரத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,365 குறைவு ஆகும். மோடி அரசு இந்த அடிப்படை விலையைக் கூட விவசாயிகளுக்கு &nbsp;உறுதி செய்யவில்லை. முறை யான கொள்முதல் வசதி இல்லாத தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை குவிண்டாலுக்கு ரூ. 5,500 முதல் ரூ.6,500 என்ற அடி மாட்டு விலைக்கே விற்கும் நிலைக் &nbsp;குத் தள்ளப்பட்டுள்ளனர். &nbsp;2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 &nbsp;அன்று, பருத்தி மீதான 11% இறக்கு மதி வரியை ஒன்றிய அரசு நீக்கி யது. இது லட்சக்கணக்கான பருத்தி &nbsp;விவசாயிகளின் வாழ்வாதாரப் பாது காப்பை மேலும் சீரழித்துள்ளது. &nbsp;அதே நேரத்தில் அமெரிக்காவிலி ருந்து பருத்தி இறக்குமதி 2024 &nbsp;(ஜனவரி-நவம்பர்) இல் 199.30 மில்லியன் டாலராக இருந்தது, 2025- இல் 95.5% அதிகரித்து 377.90 மில்லி யன் டாலராக உயர்ந்துள்ளது. இதற் &nbsp;கான காரணத்தை மோடி அரசு இது வரை மக்களுக்குத் தெரிவிக்க வில்லை. விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றச் சதி தற்போது,&rdquo;உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற் கான விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கை&rdquo; என்று கூறி &nbsp;25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை யை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு &nbsp;உத்தரவிட்டுள்ளது. இது உள் &nbsp;நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு &nbsp;எந்த உத்தியும் இல்லாமல், உண வுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி, &nbsp;அமெரிக்க விவசாயிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க அனும திப்பது ஆகும். அதாவது இந்திய விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றும், இந்தியப் பொரு ளாதாரம் மீதான நவீன கால னித்துவ ஆக்கிரமிப்பாகும். சுதந்திரத்திற்குத் துரோகம் அதே போல இந்தியா-அமெ ரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆப் பிள், பருத்தி, மரக் கொட்டைகள் (Tree nuts), சிவப்பு சோளம், விதைகள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் மற்றும் மக்காச் சோளம் சார்ந்த கால்நடைத் தீவ னங்கள் போன்றவற்றுக்கான சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் அமெ ரிக்க நிறுவனங்களுக்கு ஒரு ஏக போக நிலையை உருவாக்கும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், &nbsp;நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் &nbsp;ஆகியவற்றுடன் கையெழுத்திடப பட்ட ஒப்பந்தங்களில் பால் &nbsp;பொருட்களும் சேர்க்கப்பட்டுள் ளன. இதன் மூலம் மோடி அரசு விவ சாயிகளையும், தொழிலாளர்களை யும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் முழு மையாகச் சரணடையச் செய்து நாட்டின் சுதந்திரத்திற்குத் துரோகம் &nbsp;இழைத்துள்ளது. அமைச்சர் பதவி விலக வேண்டும் அமெரிக்கா உடனான ஒப் பந்தத்தில் இறக்குமதி வரிகளை 30% - 150% என்பதிலிருந்து 0% &nbsp;ஆகக் குறைப்பதும், ஏற்றுமதி வரி களை 0% - 3% என்பதிலிருந்து 18% &nbsp;ஆக உயர்த்துவதும் போன்ற தீவிரக் கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரியா மல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பயிர்களுக்கும் C2 + 50\% அடிப்படையில் சட்டப்பூர்வ &nbsp;உத்தரவாதம் அளிக்காத மோடி அரசு, இப்போது விவசாயம் மற்றும் &nbsp;பால்வளத் துறையைப் பாதுகாத்து &nbsp;வந்த வரி முறையை முற்றிலுமாக ஒழித்து வருகிறது. பிப்ரவரி 12 அன்று (2026) நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றியைப் பெற் &nbsp;றும், பிரதமர் இன்னும் விழித்துக் கொண்டு தவறுகளைத் திருத்தத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் &nbsp;பதவி விலக வேண்டும் என்ற கோரி க்கையை எஸ்கேஎம் மீண்டும் வலி யுறுத்துகிறது. &nbsp;மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த வும், விவசாயம், பால்வளம் மற்றும் &nbsp;ஒட்டுமொத்தப் பொருளாதா ரத்தைப் பாதுகாக்கவும் கிராம அளவிலான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீடு &nbsp;வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யு மாறு விவசாயிகளுக்கு எஸ்கேஎம் &nbsp;அழைப்பு விடுக்கிறது. பிப்ரவரி 24 &nbsp;அன்று ஹரியானா மாநிலம் குருச் சேத்திரத்தில் நடைபெறவுள்ள எஸ்கேஎம்-இன் தேசியக் குழு கூட்டம், போராட்டத்தைத் தீவிரப் &nbsp;படுத்துவதற்கான உறுதியான நட வடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.