தொழிலாளர் விரோதப் போக்கிற்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டுவோம்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>தொழிலாளர் விரோதப் போக்கிற்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டுவோம்</strong></p>
<p>கோவை, மார்ச் 30- ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கண்டித்து ஏப்ரல் 1-ஆம் தேதியை கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கவும், தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசுக்கும், அதன் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கும் உரிய பாடத்தை தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் தொழிலாளர் கள் பதிலடி கொடுப்போம் என மத்திய தொழிற்சங்கங்கள் சூளு ரைத்துள்ளது. கோவையில், அனைத்து மத் திய தொழிற்சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக் குழுவின் கூட்டம் கோவை, காட்டூர் ஏஐடியூசி தலைமை அலுவலகமான தியாகி கள் நினைவகத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நூறாண்டு காலம் போராடி பெற்ற தொழிலா ளர் சட்டங்கள் அனைத்தும் தொழி லாளர்களுக்கு எதிரான முறையில் நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்டு, தொழிலாளர் உரி மைகள் அனைத்தும் பறிக்கும் சட்டங்களாக ஒன்றிய மோடி அர சால் இயற்றப்பட்டுள்ளன. மேற்படி நான்கு சட்டத் தொகுப்புகளும் வருகின்ற 01.04.2026 ஆம் தேதி முதல் அம லாக்க போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்க ளின் அனைத்து உரிமைகளையும் அடியோடு பறித்துவிட்ட பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கு துணைபோகும் கட்சியான அஇ அதிமுகவின் தலைமையில் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மன்றத் தேர்தலுக்கான கூட்டணியை முறியடிக்க வேண் டிய கடமை நம்முன் உள்ளது. எனவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கத் திற்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து போராடி வரும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளுக்கு ஆதரவான முறையில் துணை நிற் கும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்பது, ஆதரவ ளிப்பது. மேலும் ஒன்றிய பாஜக அரசால் வருகின்ற 1.04.2026 ஆம் தேதி முதல் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துவிட்ட நான்கு சட்டத் தொகுப்புகளும் அமல்படுத்தப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், அந்த சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்பட உள்ள நாளை கருப்பு தினமாக கடைபிடிப்பது, வருகின்ற புதனன்று மாலை உக் கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பணிக்குச் செல் லும் தொழிலாளர்கள் அனை வரும் கருப்பு பேட்ச் அணிந்து பணிக்குச் செல்வதென முடிவு செய் யப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆனந்தகுமார், பிடிசி பி.துரை, எல்பிஎப் ப.வணங்காமுடி, ஏஐடி யுசி சி.தங்கவேல், பி.சுப்ரமணி யம், ஐஎன்டியுசி பி.சண்முகம், ஆர். ரங்கநாதன், டிடிஎம்எஸ் மு.தியாக ராசன், ப.சரவணகுமார், ஏஐசிசிடியு க.பாலசுப்பிரமணியன், ஜான், எம் எல்எப் ஷாஜகான், யுடியுசி பாஸ் டின் ராஜ், எஸ்டிடியு சி.தாஜூதீன், எஸ்.எம்.ரஃபி உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் தலைவர்கள் பங் கேற்றனர். ஈரோடு இதேபோல, ஈரோட்டிலும், கருப்புநாளை அனுசரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோட்டில் இயங்கி வரும் பிரபல சரக்கு போக்குவரத்து நிறு வனத்தில் (VRL), போனஸ் கேட்ட தற்காக 6 தொழிலாளர்கள் தற் காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட னர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் களுக்கு 100% பிழைப்பூதியம் வழங்கப்பட வேண்டும். சுமார் ரூ.12 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்க வேண்டிய நிலை யில், நிர்வாகம் மேல்முறையீடு செய்து தோல்வியுற்றது. இருப்பி னும், சட்டத்தைச் சூழ்ச்சியால் எதிர் கொள்ளும் விதமாக, முறையான விசாரணையின்றி தொழிலாளர் களை நிர்வாகம் தற்போது வேலை நீக்கம் செய்துள்ளது. தொழில் அமைதியை குலைக் கும் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டங்களை திருத் தியுள்ளது. இந்த சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த துடிக்கும் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடை பெறும் தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் தகுந்த பதிலடி கொடுக்கும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.</p>
