பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம்!
5 Feb 2026, 3:40 pm

பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம்!

சிபிஐ நூற்றாண்டு விழாவில் தலைவர்கள் சூளுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றா ண்டு நிறைவு விழா சென்னை வள்ளு வர் கோட்டத்தில் எழுச்சியுடன் நடை பெற்றது. தியாகம் மற்றும் போராட்ட வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பாசிச அரசியலை வீழ்த்தி இந்தியாவைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். கம்யூனிஸ்டுகள்: அறநெறியின் அடையாளம் விழாவில் சிறப்புரையாற்றிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, கம்யூனிஸ்டுகள் இன்றி இந்திய விடுதலை சாத்திய மாகி இருக்காது என்று குறிப்பிட்டார். “கம்யூனிஸ்டு களைக் கொல்லலாம், ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்று முழங்கிய அவர், காந்தியடிகளே கம்யூனிஸ்டுகளை ‘அறநெறி யாளர்கள்’ என்று போற்றியதை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடத்தும் வர்த்தகப் போர் மற்றும் உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் முன் னெடுக்கும் அரசியலமைப்புச் சட்டத் தகர்ப்பு நட வடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இன்றைய சூழலில் இடதுசாரிகளோடு பெரியாரிய, அம்பேத் கரிய அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார். அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க முயலும் பாஜகவிடமிருந்து நாட்டைக் காக்க 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தியாக வரலாறு மற்றும் எதிர்காலக் கடமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான சதி வழக்குகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்து வளர்ந்த வரலாற்றை விளக்கினார். “நமது தியாகத்திற்கு இணையாக வேறு எந்த இயக்கத்தையும் ஒப்பிட முடியாது” என்று குறிப்பிட்ட அவர், இந்த வரலாற்றைச் சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களுக்குப் பதிலடியாக, இளைய தலைமுறையிடம் உண்மையான வரலாற்றைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். ஏகாதி பத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய இலக்குகளுடன் இடதுசாரிகள் மற்றும் இடது ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாஜக எத்தனை முகமூடி அணிந்து வந்தாலும் தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஒன்றிணையும் முற்போக்கு சக்திகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் உருவாவதற்கு முன்பே விளிம்புநிலை மக்களை அமைப்பாக்கி, அரசியல்படுத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்றார். அவர்களின் தியாகம் அளப்பரியது என்றும், தேசியவாதத்தின் பின்னால் நிற்காமல் உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போர்க் குணத்தை விதைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம் என்றும் போற்றினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மநுதர்மத்திற்கும் சமதர்மத்திற்கும் இடையிலான இந்தப் போரில் சமதர்மமே வெல்லும் என்றார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மமக தலை வர் ஜவாஹிருல்லா, சிபிஐ(எம்எல்)எல் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாற்றைப் போற்றி, பாசிச சக்திகளை வீழ்த்த சபதமேற்றனர். சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையேற்றுப் பேசுகையில், ஜனநாயகத்தின் உட்பொருளான சமத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் ஆகியோரும் பாசிசத்திற்கு எதிரான இந்த ஒற்றுமையை வலியுறுத்தி உரையாற்றினர்.