பாஜக - அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
31 Mar 2026, 4:50 pm
<p><strong>பாஜக - அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!</strong></p>
<p>உதயநிதி பேச்சு தருமபுரி, மார்ச் 31- தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் பி.பழனியப்பனையும், அரூரில் வேட் பாளர் வி. சண்முகத்தையும் ஆத ரித்து துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் செவ்வாயன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ”தமிழகத்திற்கு எதுவும் செய்யாத பாஜகவையும், அதன் ’மொரட்டு அடிமை’யாக இருக்கும் அதி முகவையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இது தில்லிக்கும் தமி ழகத்திற்குமான போர்; மோடியா - தமிழகமா என பார்க்க வேண்டிய தேர் தல். ஒவ்வொரு முறையும் தில்லியை விரட்டுவது போல, இந்த தேர்தலில் மோடியையும் எடப்பாடி பழனிச்சாமி யையும் ஓட ஓட விரட்ட வேண்டும்.” மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தருமபுரியில் மட்டும் 1.30 லட் சம் பெண்கள் பயனடைந்து வருகின் றனர். இத்திட்டத்திற்கு எதிராக தொட ரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. மேலும், ரூ.410 கோடி மதிப் பிலான தருமபுரி - திருவண்ணாமலை நான்கு வழிச்சாலை பணிகள் 60% நிறைவடைந்துள்ளதையும், மலை வாழ் மக்களுக்கான புதிய சாலை திட்டங்களையும் பட்டியலிட்டார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில், தரு மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் ஆ.மணி. எம்பி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.சிசுபாலன், அரூர் ஒன்றியச் செயலாளர் பி. குமார் பாப்பிரெட்டிப் பட்டி ஒன்றியச் செயலாளர் தி. வ. தனு சன் மற்றும் காங்கிரஸ், சிபிஐ, விசிக, தேமுதிக, மதிமுக, கொமதேக, மஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற் றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற் றனர்.</p>
