முந்தய பக்கம்

சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம்

29 Dec 2025, 6:22 pm
சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம்
<p><strong>சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்போம்</strong></p> <p>கோவை, டிச.29- சிறுபான்மை மக்களின் வழி பாட்டு உரிமையை பாதுகாக்க &nbsp;உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ &nbsp;சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் வகை யில் பஜ்ரங் தள், அனுமன் சேனா உள் ளிட்ட இந்துத்துவா கும்பல் வன் முறையை கட்டவிழ்த்துள்ளது. &nbsp;கிறித்துவர்கள் மீது ததாக்குதல் &nbsp;நடத்தியுள்ளனர். கிறிஸ்துவர், இஸ் லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை &nbsp;மக்களின் மீது பல்வேறு பெயர்களை &nbsp;கொண்ட இந்துத்துவா கும்பல் திட்ட மிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களின் &nbsp;வழிபாட்டு உரிமைகளை பறித்து வருகின்றனர். இதில் ஈடுபடும் நபர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதம் மூலம் மக்க ளிடையே வெறுப்பை பரப்பும் ஆர் எஸ்எஸ் &ndash; பாஜகவினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறு பான்மை மக்களின் வழிபாட்டு உரி மைகளை பாதுகாக்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மசக்காளி பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஐ நகரச் செயலா ளர் சண்முகம் தலைமை வகித்தார். &nbsp;சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வீ.தெய்வேந்திரன், சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தங்க வேல் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரச் செயலாளர் சி.மூர்த்தி, &nbsp;மாமன்ற உறுப்பினர் பூபதி, சிபிஐ &nbsp;மாவட்டப் பொருளாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட நிர்வாகி செல் வராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram