தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் வழக்கறிஞர்கள் பங்கேற்ற மாராத்தான்

14 Feb 2026, 4:33 pm
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் வழக்கறிஞர்கள் பங்கேற்ற மாராத்தான்
<p><strong>அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் வழக்கறிஞர்கள் பங்கேற்ற மாராத்தான்</strong></p> <p>கோவை, பிப்.14- அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம் &nbsp;சனியன்று நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு தாக்குதல் களை சந்தித்து வரும் சூழலில், அதனை பாதுகாக்க வலியு றுத்தி கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் &nbsp;மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. டாக்டர் பி.ஆர். அம்பேத் கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் &nbsp;சட்டம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதே நிலையில் &nbsp;நீடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், ஜனநாயகத்தின் &nbsp;அடிப்படை தூண்கள் சிதைக்கப்படுவதை கண்டித்து இந்த &nbsp;நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. குறிப்பாக, சுதந்திர இந்தியாவிலிருந்து தற்போது வரை &nbsp;தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி &nbsp;ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ஆளும் அரசு &nbsp;தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி &nbsp;சட்டத் திருத்தத்தின் வழியாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதியை நீக்கிவிட்டு, ஆளும் கட்சியை சேர்ந்த இருவர் &nbsp;மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் என்ற வகையில் &nbsp;மாற்றியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத் தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் தகர்க்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்கிற முழக்கத்தை முன்வைத்து நடை பெற்ற இந்த மாராத்தானில் நூற்றுக்கணக்கான வழக்கறி ஞர்கள் அதிகாலை 6 மணிக்கே தங்களது குடும்பத்தின ரோடு திரளாக கலந்து கொண்டனர். ஜனநாயகத்தையும் நாட்டின் சட்ட மாண்புகளையும் எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிற உறுதியை நெஞ்சில் ஏந்தி வழக்கறிஞர்கள் பெருமளவில் பங்கேற்றது பெரும் கவ னத்தை ஈர்த்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.