முந்தய பக்கம்

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!

22 Jan 2026, 2:57 pm
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!
<p><strong>வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!</strong></p> <p>தருமபுரி, ஜன.22- பிஎஸ்என்எல் ஊழியர்க ளுக்கு 3 ஆவது சம்பள மாற் றம் ஏற்படுத்த வேண்டும் என தருமபுரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லக வளாகத்தில் வியாழனன்று நடைபெற் றது. ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாநில உத விச்செயலாளர் ஆர்.கோபாலன், ஊழியர் சங்க மாநில உதவிச்செயலாளர் எஸ்.ஹரி ஹரன், மாநில உதவிச்செயலாளர் ஜி.உமா ராணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இக்கருத்தரங்கில், தொழிலாளர் சட்டத் &nbsp;தொகுப்புகளுக்கு எதிராகவும், மக்களின் உரி மைகள் மற்றும் சலுகைகள் மீது ஒன்றிய அரசு நடத்தும் பன்முகத் தாக்குதலுக்கு எதிராக வும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள் கைகளை கண்டித்து பிப்.12இல் நடைபெ றும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாக்குவது; பிஎஸ்என்எல் சேவையை மேம் படுத்த வேண்டும். 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3 ஆவது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஓய்வூ தியர்களுக்கும் 3 ஆம் ஊதிய மாற்றம் ஏற்ப டுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்து, சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram