தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநர்களுக்கு எதிரான அராஜகச் சட்டத்தைத் தூக்கி எறிய வைப்போம்! தமுஎகச கண்டனக் கருத்தரங்கில் கருத்தாளர்கள் ஆவேசம்

28 Mar 2026, 4:13 pm
திருநர்களுக்கு எதிரான அராஜகச் சட்டத்தைத் தூக்கி எறிய வைப்போம்! தமுஎகச கண்டனக் கருத்தரங்கில் கருத்தாளர்கள் ஆவேசம்
<p><strong>திருநர்களுக்கு எதிரான அராஜகச் சட்டத்தைத் தூக்கி எறிய வைப்போம்! தமுஎகச கண்டனக் கருத்தரங்கில் கருத்தாளர்கள் ஆவேசம்</strong></p> <p>சென்னை, மார்ச் 28- பாஜக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தாலே அது எளிய மக்களுக்கு எதி ராகத்தான் இருக்கும். சிறுபான்மையி னருக்கு எதிராக இயங்கும் பாஜக அரசு, இப்போது பாலினச் சிறுபான்மையி னரை இலக்கு வைத்துள்ளது. எந்த விதத்திலும் திருநர்களுக்கு நன்மை செய்யாத இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற குரலை தமுஎகச உடனே எழுப்பியது என தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்க (தமுஎகச) &nbsp;மாநிலக்குழு சார்பில் செவ்வாய்க்கிழ மை (மார்ச் 25) சென்னை பெரம் பூரில் நடைபெற்ற கண்டனக் கருத்தரங் கிற்குத் தலைமை தாங்கி பேசிய அவர், &ldquo;மாநிலம் முழுவதுமே மக்களிடம் சென்று நாம் இந்த மசோதா பற்றி விளக்கிப் பேச வேண்டி இருக்கிறது. திருநர்களிடம் அமர்ந்து அல்ல, பொதுச் சமூகத்தின் மனசாட்சியோடு நாம் பேச வேண்டும். அதை நிச்சயம் தமுஎகச செய்யும்&rdquo; என்றார். இதென்ன அராஜகம்? சமூகச் செயற்பாட்டாளர் திரு நங்கை சபிதா பேசுகையில், &ldquo;மருத்து வச் சான்றிதழ் என்கிற நிர்ப்பந்தத்தை ஏன் கொண்டு வர வேண்டும்? எனது பாலினத்தைக் கேள்விக்கு உட்படுத்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் முன் பாக எங்கள் ஆடைகளைக் களைந்து நாங்கள் ஏன் நிற்க வேண்டும்? எந்த &nbsp;ஆணையோ, பெண்ணையோ உன் பாலினத்தை நிரூபி என்று சமூகம் கேட்கி றதா? நாங்கள் ஏன் மெய்ப்பிக்க வேண்டும்? இதென்ன அராஜகம்? ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்ந்து மாறிய கணமே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோம். சமூகத்தின் அத்தனை கொச்சை மொழியையும் ஏளனப் பார்வையையும் எதிர் கொண்டு வாழ்கிறோம். எங்களை இன்னும் எங்கே கொண்டு தள்ளப் போகிறார் கள்?&rdquo; என்று வெகுண்டு பேசினார். ஜமாத் என்கிற பாதுகாப்பு ஏற்பாடே இந்தப் புதிய மசோதாவால் இல்லாது போகச் செய்யப்பட இருக்கிறது; எங்க ளுக்கு என்ன பாதுகாப்பு என்று திருநங்கை விஸ்வராணி கேள்வி எழுப்பினார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் திருநங்கை சுதா பேசுகையில், &ldquo;மசோ தாவுக்கு எதிரான கண்டனக் கருத்த ரங்கு நடந்து கொண்டிருக்கும்போதே நாடாளுமன்றத்தில் இது நிறைவேற் றப்பட்டு விட்டது என்ற செய்தி வருகி றது. திருநங்கைக்கு எதிரான குற்றத் திற்கு விதிக்கப்படும் தண்டனையைக் காட்டிலும், குற்றம் சுமத்தப்படும் திரு நர்களுக்கு இந்த மசோதா சொல்லும் தண்டனைகள் கடுமையாக உள்ளன. எங்களை மனிதராக மதியுங்கள் முதலில்&rdquo; என்றார். திருநம்பி ரமேஷ் பேசுகையில், &ldquo;என் பெயர் கவிதா அல்ல ரமேஷ் என்று எத்தனை இடத்தில் வாதாடுவது? உட லால், மனத்தால் யார் யாரிடமோ ஏன் &nbsp;என்னை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொள்ள வேண்டும்? இந்த மசோதா எங்களை முற்றாக வெளியேற்றி விட்டது&rdquo; என்றார். கட்டியக்காரி குழு &nbsp;இயக்குநர் ஸ்ரீஜித் குமார், சிறு பான்மை நலக்குழு சார்பில் எம். ராம கிருஷ்ணன் ஆகியோர் உரை யாற்றினர். உரையாடல் அற்ற தன்மை சிறப்புரையாற்றிய தமுஎகச பொ துச் செயலாளர் களப்பிரன், &ldquo;மருத்து வச் சான்றிதழ் எதற்கு என்று கேட்டால், இட ஒதுக்கீட்டுக்காக யார் வேண்டுமா னாலும் தங்களை திருநர் என்று சொல்லிக் கொள்வார்கள் என ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். எவ்வளவு மோசமான கட்டுக்கதை இது. பாலினச் சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் செயல் மன்னிக்க முடியாதது. இந்த அரசு மசோதாவைத் தயாரிக்குமுன் தொடர்புள்ளவர்களை அழைத்து ஆலோசித்து இருக்க வேண்டும். உரை யாடல் அற்ற தன்மை ஜனநாய கத்திற்கு உகந்தது அன்று. இந்த மசோதா சட்டமாக வந்தாலும், அதை எதிர்த்த போராட்டங்களில் தமுஎகச களத்தில் நிற்கும்&rdquo; என்றார். நிறைவாகப் பேசிய சமூகச் செயற் பாட்டாளர் அக்னி, &ldquo;ஆண், பெண் இரு பாலரைத் தவிர வேறு பாலினத்திற்கு இடமில்லை என்று கையெழுத்திட்ட டொனால்டு டிரம்ப் போலவே திருநர்க ளுக்கு எதிரான இந்தத் தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. நால்சா வழக்கு சொன்ன வழிகாட்டுதல்க ளையும், குறைந்தபட்ச உரிமைகளை யும் கூட இந்தப் புதிய மசோதா தூக்கி &nbsp;எறிந்துவிட்டது&rdquo; என்றார். நிகழ்வை லக் ஷயா மன்னார் ஒருங் கிணைத்தார். தமுஎகச மூத்த தலை வர் மயிலை பாலு, துணைச் செயலாளர் ஹேமாவதி முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்டத் தலைவர் விஜயன் வரவேற்க, எழுத்தாளர் கரன் கார்க்கி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.