உரிமைகளை மீட்கப் போராடுவோம்! இடது முன்னணியின் முழக்கம்!
21 Mar 2026, 2:42 pm
<p><strong>உரிமைகளை மீட்கப் போராடுவோம்! இடது முன்னணியின் முழக்கம்!</strong></p>
<p>“மக்களின் ஜனநாயக உரி மைகளையும், வாக்க ளிக்கும் அதிகாரத்தை யும் பாதுகாப்பதற்கான எங்களது போ ராட்டம் ஓயாது” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம், செய்தியாளர்களி டையே பிரகடனம் செய்துள்ளார். இரண்டாம் கட்டப் பட்டியல் மேற்கு வங்க இடது முன்னணி, தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வியாழனன்று வெளி யிட்டது. முசாபர் அகமது பவனில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், மூத்த தலைவர் மிஹிர் பைன் 32 தொகு திகளுக்கான வேட்பாளர்களை அறி வித்தார். உடல்நலக் குறைவு காரண மாக இடது முன்னணி தலைவர் பிமன் பாசு இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை. முக்கிய வேட்பாளர்கள் l பவானிபூர்: வழக்கறிஞர் ஸ்ரீஜீவ் விஸ்வாஸ் (சிபிஐ-எம்) l டாலி கஞ்ச்: பார்த்த பிரதிம் விஸ்வாஸ் (சிபிஐ-எம்) l பாலி கஞ்ச்: ஆப்ரின் பேகம் (ஷில்பி) (சிபிஐ-எம்) l நயாகிராம்: டாக்டர் புலின் பிஹாரி பாஸ்கே (சிபிஐ-எம்) lநந்திகிராம்: அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த இத்தொகுதியில் சிபிஐ சார்பில் சாந்தி கிரி போட்டி யிடுகிறார். l டயமண்ட் ஹார்பர்: சமரேந்திர நாத் நையா சிபிஐ(எம்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அசன்சால் வடக்கு தொகுதியில் சிபிஐ சார்பில் அகி லேஷ் குமார் சிங் போட்டியிடுகிறார். வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் எனப் பல்துறை ஆளுமைகளுக்கு இந்தப் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான முழக்கம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட கையோடு, மாநிலம் முழுவதும் இடது சாரி தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர். “வங்கத்தைக் காப்போம்” (Bangla Bachao) என்ற முழக்கத்தோடு, ஊழல் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிராக இடதுசாரிகள் இம்முறை மிக வலுவான கூட்டணியை அமைத்துக் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இடது முன்னணியுடன் இணைந்து சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி தேர்தல் ஆணையத்தின் சில நடை முறைகளுக்கு எதிராக சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர்ர்நீதிமன்றம் வழங்கிய உத்த ரவை இடதுசாரிகள் தங்களின் நன்னெறி வெற்றியாகக் கருதுகின்ற னர். “வாக்காளர் பட்டியலை முழுமை யாக வெளியிட வேண்டும். எதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை ஒரு வாரத்திற் ்குள் ஆணையம் விளக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை முகமது சலீம் சுட்டிக்காட்டினார். பாஜக - ஆர்எஸ்எஸ் நாடகம் அம்பலம் மருத்துவ மாணவி ‘அபயா’ மரணம் தொடர்பான விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டிய சலீம், “அன்று அந்த மாணவியின் உடலை அவசரமாக எரிக்க முயன்றபோது, உயிரைப் பணயம் வைத்து தடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீனாட்சியும், கல்தானும் தான். அப்போது வராத பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ஸும் இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக நாடகமாடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெற்றோரை தில்லிக்கு அழைத்துச் சென்றவர்களால், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரைச் சந்திக்கக் கூட வைக்க முடியவில்லை” எனச் சாடினார். மக்களின் வாழ்வுரிமைக்காகவும், நீதிக்காகவும் இடதுசாரிகளின் போ ராட்டம் தேர்தல் களத்திலும் தொடரும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.</p>
