தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் ஆதிக்கத்தை தகர்ப்போம் வெனிசுலாவை பாதுகாப்போம் – சிபிஎம்

5 Jan 2026, 6:21 pm
அமெரிக்காவின் ஆதிக்கத்தை தகர்ப்போம் வெனிசுலாவை பாதுகாப்போம் – சிபிஎம்
<p><strong>அமெரிக்காவின் ஆதிக்கத்தை தகர்ப்போம் வெனிசுலாவை பாதுகாப்போம் &ndash; சிபிஎம்</strong></p> <p>திருப்பூர், ஜன. 5- சோசலிச நாடான வெனிசுலா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்து வரும் தாக்குதல்களைக் கண்டித்தும், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவ ரது இணையரை அமெரிக்க அரசு &nbsp;சிறைபிடித்திருப்பதைக் கண்டித் தும் நாடு முழுவதும் இடதுசாரி கட்சி கள் போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, திருப்பூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் புது பேருந்து நிலையம் முன்பாக திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. நந்தகோபால் தலைமை ஏற்றார். &nbsp;இதில் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் தௌ.சம்சீர் அகமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, &nbsp;நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் &nbsp;உரையாற்றினர். நீலகிரி நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி &nbsp;திடல் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை தாலுகா செயலாளர் நவீன் &nbsp;சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். சங்கர லிங்கம், கட்சியின் மூத்த தோழர் &nbsp;கே. ராஜேந்திரன், நடுவட்டம் கிளைச் செயலாளர் சி. கிருஷ்ணன் &nbsp;ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முடிவில், தாலுகா உறுப்பினர் &nbsp;புட்டுசாமி நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, பந்தலூர் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமையேற்றார். இதில், சிபிஎம் &nbsp;மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன் கண்டன உரையாற்றினார். இதில், ஏரியா கமிட்டி உறுப்பினர் கள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். தருமபுரி வெனிசுலா அதிபர் மதுரோவை &nbsp;நாடு புகுந்து அராஜகமாக கைது செய்துள்ள அமெரிக்காவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன் மாநிலக்குழு உறுப்பினர் &nbsp;ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, சி. &nbsp;நாகராஜன், சோ. அருச்சுனன், எம். &nbsp;முத்து, வே. விசுவநாதன், ஆர். &nbsp;மல்லிகா, தி. வ. தணுசன், சக்தி வேல் ஒன்றிய செயலாளர்கள் தரும புரி கே. கோவிந்தசாமி, அரூர் பி. &nbsp;குமார் மாவட்டக் குழு உறுப்பினர் கள் கே. என். மல்லையன், டி. எஸ். &nbsp;ராமச்சந்திரன்,,என்.கந்தசாமி,எஸ்.கிரைஸாமேரி,கே.பூபதி ,ஆர்.சின்னசாமி ,ஏ.ஜெயா, பி. ஜீவா, சி. கலாவதி ஆகியோர் பேசினர். &nbsp;இதேபோன்று பென்னாகரம் மேற்கு ஒன்றியக் குழுவின் சார்பில் &nbsp;பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். சிஐடியு சார்பில் அரூர் ரவுண்டானா அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சி ஐ டி யு &nbsp; மாவட்ட துணைச் செயலாளர் சி. &nbsp;ரகுபதி தலைமை வகித்தார். நிர் வாகிகள் ஜெயராமன், குமரி, மன்னன், மணிவண்ணன், &nbsp;வடி வேலு, சதாசிவம் பெருமாள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.