மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!
28 Jan 2026, 2:33 pm

மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!e

தருமபுரி கூட்டத்தில் பெ. சண்முகம் அழைப்பு

தருமபுரி கூட்டத்தில் பெ. சண்முகம் அழைப்பு தருமபுரி, ஜன. 28 - மத நல்லிணக்கத்தை யும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்க முயலும் பாஜக மற்றும் அதன் கூட்டாளியான அதிமுக-வை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் அறைகூவல் விடுத்துள்ளார். தருமபுரியில் புதனன்று நடைபெற்ற கட்சியின் நிதி யளிப்புப் பேரவை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு: 2026 தேர்தல் வியூகம் கடந்த டிசம்பர் 2, 3 தேதி களில் நடைபெற்ற மாநி லக்குழு கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு கொள்வது என வும், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத வாத சக்திகளுக்கு எதிராக திமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி களத்தில் உள்ளது. மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் திமுக அரசுடன் இணக்க மாகவும், உரிய நேரங்களில் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தும் நாம் செயல்பட்டு வருகிறோம். அரசு ஊழியர் நலனும் தமிழக அரசும் ஜாக்டோ-ஜியோ போராட் டத்திற்கு முன்னதாகவே ‘டேப்ஸ்’ (TAPS) ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களைத் தமிழக அரசு உறுதி செய்துள் ளது. ஒன்றிய அரசு மாநிலங் களுக்கான நிதியைப் பாரபட்ச மாகப் பகிர்ந்தளிக்கும் நிலை யிலும், ரூ.9.5 லட்சம் கோடி கடன் சுமையிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை யை முதல்வர் நிறைவேற்றி யுள்ளார். அங்கன்வாடி, சத்து ணவு மற்றும் சாலைப் பணியா ளர்களின் கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் வலி யுறுத்தியுள்ளோம்; அவை விரைவில் நிறைவேறும். பாஜக என்னும் ‘பூதம்’ பாஜக என்பது ஒரு சாதா ரணக் கட்சி அல்ல, அது ஒரு கொடிய பூதம். எந்த மாநி லத்தில் நுழைகிறதோ, அங்கி ருக்கும் மாநிலக் கட்சிகளை உடைத்துச் சிதைப்பதே அதன் வேலை. மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் சரத்பவா ரின் கட்சிகளுக்கு நேர்ந்த கதிதான் அதிமுகவிற்கும் ஏற்ப டும். அதிமுகவுடன் கூட்டு வைத்து அக்கட்சியைச் சிதைப் பதே பாஜகவின் திட்டம். அரசி யலில் சினிமா வசனங்கள் பேசும் நடிகர்கள், நிஜமான அரசியல் நெருக்கடிகளின் போது மௌனம் காப்பது அவர்களின் அரசியல் முதிர் ச்சியின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிதியளிப்பு இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் சார்பில் முதற் கட்ட நிதியாக ரூ. 13,32,670/- (பதிமூன்று லட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று எழுபது) மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப் பட்டது. இந்தக் கூட்டத்திற்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். மாநிலச் செயற் குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லி பாபு, ஏ. குமார், மூத்த தலைவர் இளம்பரிதி ஆகியோர் பங்கே ற்றனர். மேலும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எம். முத்து, சோ. அருச்சுனன், வே. விசுவ நாதன், ஜி. சக்திவேல், தி.வ. தனுசன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.என். மல்லையன், டி.எஸ். ராமச் சந்திரன், ஆர். சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைக்குழுச் செய லாளர்கள் ஆர். ஜோதிபாசு (தருமபுரி நகரம்), கே. கோவிந்தசாமி (ஒன்றியம்), எஸ்.எஸ். சின்னராஜ் (நல்லம் பள்ளி), ஆ. ஜீவானந்தம் (பென்னாகரம் மேற்கு), பி. குமார் (அரூர்), ஆர். சக்திவேல் (பாப்பாரப்பட்டி), கே. தங்கராசு (மொரப்பூர்), எம். தங்கராசு (ஏரியூர்), சி. சேகர் (இண்டூர்) உள்ளிட்ட திரளான கட்சித் தோழர்கள் பங்கேற்றனர்.