தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடியின மக்களின் நில உரிமையை பாதுகாத்திடக்கோரி ஆர்ப்பாட்டம்

1 Dec 2025, 5:20 pm
பழங்குடியின மக்களின் நில உரிமையை பாதுகாத்திடக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>பழங்குடியின மக்களின் நில உரிமையை பாதுகாத்திடக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>மேட்டுப்பாளையம், டிச.1- பழங்குடியின மக்களின் நில உரிமை பறிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, அவற்றை பாதுகாத்திடக்கோரி மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அதில், சீங்குளி, கோப்பனாரி, தோலம்பாளையம், பட்டிசாலை, ஆனைக்கட்டி உள்ளிட்ட &nbsp;பகுதிகளில் பழங்குடியின மக்கள் &nbsp;அதிகம் வசிக்கின்றனர். இந்த மலைக் கிராமங்களில் காலங்காலமாக வசித்து வரும் இடங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. மேலும், வலுக்கட்டாயமாக பழங்குடி யின மக்களை அவர்களது பூமியில் இருந்து வெளியேற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே இப்பிரச்சனைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மலைவாழ் மக்கள் சங்கம் &nbsp;மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை இரு ளர் பழங்குடி மக்கள் முன்னேற்ற பாது காப்பு சங்கம் சார்பில் மேட்டுப்பாளை யம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மழைவாழ் மக் கள் சங்கத்தின் நிர்வாகி ம.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் கே.கனக ராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட் டச் செயலாளர் ப.கருப்புசாமி, விவசாய &nbsp;சங்க பொறுப்பாளர் ஆர்.சுரேஷ், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர் தொல்குடிமைந்தன், மலை வாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப் பினர் சந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.