சூலூர் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
27 Nov 2025, 3:11 pm
<p>கோவை, நவ.27- கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 12 ஆம் தேதியன்று முதல் தொடர்ந்து சிறுத் தை நடமாட்டம் அதிகரித்து வருவ தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 12 ஆம் தேதி கண்ணம் பாளையம் பகுதியில் உள்ள தனி யார் மோட்டார் கம்பெனி குடோனில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரா வில் பதிவானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் புத னன்று நள்ளிரவுக்குப் பிறகு சூலூர் அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றுக்கு பின்புறம் அமைந்த குடியி ருப்புப் பகுதியில் சிறுத்தை நட மாடிய காட்சி அங்கிருக்கும் வீடு ஒன் றின் கண்காணிப்பு கேமராவில் தெளி வாகப் பதிவாகியுள்ளது. சம்பவத் தையடுத்து அப்பகுதி முழுவதும் பர பரப்பு நிலவுகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். காலை நேரங்களில் பால் வழங்குப வர்கள் தாமதமாக வருகின்றனர், தினசரி நடைபயிற்சி செல்வோர் குறைந்துள்ளனர். ராவத்தூர் பிரிவு, கண்ணம் பாளையம், மனோஜ் நகர், பாப்பம் பட்டி பிரிவு போன்ற இடங்களில் காலி நிலங்கள், புதர்கள், விவசாய நிலங் கள் அதிகம் உள்ளதால் சிறுத்தை பதுங்குவதற்கான வாய்ப்புகள் அதி கம் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடப்ப தற்கு முன்னரே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுத்தை யைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதி யில் விட்டுவிட வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். சம்பவ இடங்களில் உள்ள சிசி டிவி கேமரா பதிவுகளை வனத்துறை யினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை கண் காணித்துப் பிடிக்க தீவிர நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாக வனத்துறையினர் தெரிவித்துள் ளனர்.</p>
