குழந்தையை வேட்டையாடிய சிறுத்தை
7 Dec 2025, 3:52 pm
<p>குழந்தையை வேட்டையாடிய சிறுத்தை</p>
<p>கோவை, டிச.7- வால்பாறை அருகே வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை சிறுத்தை தாக்கிய நிலையில், வனத்துறையினர் குழந்தையை சடலமாக மீட்ட னர். கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட் டார வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் அடிக்கடி வெளி யேறி குடியிருப்புக்குள் நுழைவது தொடர் கதையாக உள் ளது. இந்நிலையில், சனியன்று வால்பாறை அருகே உள்ள ஐயர்பாடி ஜெஇ பங்களா தேயிலை தோட்டப் பகுதியி லுள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள் ளது. அங்கு பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளி யான ரோஜாப் அலி - சஜிதா பேகம் தம்பதியரின் ஐந்து வயது குழந்தையான சைபில் அலோன், வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த குழந்தை யை கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென சிறுத்தை தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மக்கள் உதவியுடன் தேயிலைத் தோட்டத் திற்குள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூண்டு மணிநேர தேடலுக்குப் பிறகு சிறுவனை சடலமாக மீட்டனர். வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிறுத்தை தாக்கி தேயிலை தோட்டத்திற்குள் இழுத் துச் சென்றதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். தற் போது மீண்டும் ஒரு சிறுவனை சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம் பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றியும் அகழி கள், மின் வேலிகள் அமைக்க வேண்டும், அதேபோல் வனத் துறையினர் தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். வடமாநில தொழிலாளர்களுக்கு வனவிலங்குகள் தாக்கு தலிலிருந்து காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும், என்றனர்.</p>
