நாய்களை வேட்டையாடிய சிறுத்தை
26 Nov 2025, 4:29 pm
<p><strong>நாய்களை வேட்டையாடிய சிறுத்தை</strong></p>
<p>ஈரோடு, நவ.26- சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தை காக் கும் பணியில் ஈடுபட்டிருந்த நாய்களை சிறுத்தை வேட்டையாடிச் சென்ற சம்ப வம் அப்பகுதி மக்களிடை யே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சுற்றுவட்டார கிராமங்களில் முக்கியத் தொழி லாக ஆடு, மாடு வளர்ப்பு உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்கிடையே பண்ணாரி வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை, அருகே உள்ள பட்டர மங்கலம் ஊருக்குள் புகுந்து சாலையில் நடமாடிய காட்சி, அங்குள்ள விவசாயத் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் சாலை யில் நடமாடிய சிறுத்தையை கண்ட காவல் நாய்கள் குரைத் துக் கொண்டே இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சிறுத்தை, அந்த நாய்களை வேட்டையாடி சென்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களை அச்சுறுத்தும் சிறுத் தையை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
