தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புல்லைத் தின்னும் சிறுத்தை - கணேஷ்

9 Nov 2025, 2:42 pm
புல்லைத் தின்னும் சிறுத்தை - கணேஷ்
<p><strong>புல்லைத் தின்னும் சிறுத்தை</strong></p> <p>காட்டு மருத்துவமனையில் நோயாளிகளைக் கவ னித்துக் கொண்டிருந்தார் டாக்டர் கரடி. &nbsp;உடம்பு முழுக்க காய்ச்சலுடன் வந்தி ருந்த மானை பரிசோதித்த டாக்டர், ஒரு பச்சிலையைக் கசக்கி அதன் சாறை மானின் வாயில் ஊற்றினார். &nbsp;&ldquo;லொக்.. லொக்&rdquo; என்று இருமியது மான். &nbsp;&ldquo;தூக்கம் வரும்... சிறுத்தை ஒண்ணு உலாவுது.. பத்திரமான இடத்துல படுத்துத் தூங்கிரு.. காலைல சரியாயிடும்.&rdquo; அடுத்து காட்டெருமை ஒன்று அசைந்து, அசைந்து வந்து உட்கார்ந்தது. &ldquo;என்ன ஆச்சு..&rdquo; &ldquo;டயர்டாவே இருக்குது..&rdquo; &ldquo;அப்புடி என்ன வேலையச் செஞ்ச..&rdquo; &ldquo;ஒண்ணுமே செய்யல..&rdquo; &ldquo;அதான் பிரச்சனை.. போ.. போய் அங்கயும், இங்கயுமா கொஞ்சம் நடமாடு..&rdquo; &ldquo;அப்போ மருந்து..&rdquo; &ldquo;நல்லா நட... அதான் மருந்து&rdquo; என்று டாக்டர் கரடி விரட்டியது. அப்போது &ldquo;பர்ர்ர்..பர்ர்ர்...&rdquo; என்று சிறுத்தை யின் சத்தம் கேட்டது. காத்திருந்த மற்ற விலங்கு கள் விழுந்தடித்து ஓடின. &lsquo;டயர்டா இருக்கு&rsquo;னு சொன்ன காட்டெருமை நாலுகால் பாய்ச்ச லில் பாய்ந்தது. &nbsp;&ldquo;வாங்க சிறுத்தையாரே..&rdquo; &ldquo;என்ன டாக்டர்... யாரையும் காணோம்..காட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களோ&rdquo; &ldquo;உங்க சத்தம் கேட்டவுடன எல்லா அலறி அடிச்சு ஓடிருச்சு.. சரி...உங்களுக்கு என்ன ஆச்சு..?&rdquo; &ldquo;நேத்து டி.வி. பாத்தேன். மனுஷங்க நம்மள விட மாட்டாங்க போலருக்கு... ஒரு அம்மா, சிறுத்தைகளோட புள்ளிகள அழிக்க முடியாதுல்லனு பேசிட்டு இருந்தாங்க.&rdquo; &ldquo;ஆமா... அதெப்புடி அழிக்க முடியும்.. பொறக்குறப்பவே வந்ததாச்சே..&rdquo; &ldquo;அதெல்லாம் தெரியாது... அத அழிச்சா கனும்.. நீ டாக்டர்தான..&rdquo; மிரட்டியது சிறுத்தை. சிறுத்தை விடாது என்று கரடிக்குத் தெரி யும். அதோடு, டாக்டர்னு காடே நம்பிட்டு இருக்கு. அதுக்கு சிக்கல் வந்துரக்கூடாதே.. &ldquo;சரி... சாப்பாட்டுலயே சரி பண்ணிரலாம்... நீ இனிமே மாமிசம் சாப்புடக்கூடாது.. முதல்ல பத்து நாள் இருந்துட்டு வா... எப்புடி இருக்குனு பாத்துரலாம்..&rdquo; சிறுத்தை பார்த்த பார்வை &ldquo;என்ன வெச்சு காமெடி, கீமெடி எதுவும் பண்ணலியே..&rdquo; என்று கேட்பது போல் தெரிந்தது. &ldquo;சாப்பு டாமயே இருக்கச் சொல்றியா..&rdquo; &nbsp;&ldquo;அப்புடிச் சொல்லல.. உன்னவிட சின்ன விலங்கு எதையும் சாப்பிடாம இருக்கனும்.. அவ்வளவுதான்..&rdquo; &ldquo;அப்புடினா, புள்ளிலாம் மறைஞ்சுருமா..&rdquo; &lsquo;இல்லைனு சொன்னா, அடுத்த பலி நம்மதான்&rsquo;னு மனதில் நினைத்த டாக்டர் கரடி, &ldquo;கொஞ்சம், கொஞ்சமா மறைஞ்சுரும்..&rdquo; என்றது. &ldquo;சரி... நாளைலருந்து பெரிய விலங்குகள மட்டும் அடிச்சுச் சாப்புடுறேன்.. அது சரி... எதெல்லாம் பெரிய விலங்குகள்..&rdquo; என்று கேட்டுவிட்டு &ldquo;கரடி&rdquo; என்று தொடங்கியது.. &nbsp;வேகவேகமாகக் &lsquo;கரடிலாம் இல்ல&rsquo; என்றது டாக்டர் கரடி. &nbsp;சிறுத்தை முறைப்பதைக் கண்டு, &nbsp;&ldquo;இதோ பாரு... நான் உன்னை விட உயரம் குறைவு&rdquo; என்று நாலு கால்களில் நின்று முதுகைத் தாழ்த்திக் காட்டியது. &ldquo;யானை, சிங்கம்..&rdquo; என்று சிறுத்தை &nbsp;கரடியை நிமிர்ந்து பார்த்தது. &ldquo;காண்டா மிருகம்..&rdquo; என்று சொல்கையிலேயே, &lsquo;இப்படி நான் சிறுத்தையிடம் சொன்னது மட்டும் காண்டாமிருகத்துக்கு தெரிஞ்சா அவ்வ ளவுதான்&rsquo; என்று சொல்லிக் கொண்டது. &ldquo;சரி.. முயற்சிக்கிறேன்..&rdquo; என்று நகர்ந்தது. அன்று முழுவதும் கண்ணில் பட்டதெல்லாம் சின்னச் சின்ன விலங்குகள்தான். &lsquo;இந்த விலங்குகளைத்தான் இவ்வளவு நாள் அடிச்சு சாப்புட்டு இருக்கோம்.. இப்புடித் திடீர்னு &nbsp;முடிவெடுத்தது தப்போ&rsquo; என்று அரற்றியவாறே அலைந்தது சிறுத்தை. &nbsp;மான்களுக்கோ சந்தேகம். ஒரு நரி வேண்டுமென்றே சிறுத்தையின் முன்னால் குறுக்கும், நெடுக்குமாக நடை பயின்றது. யானை பிளிறும் சத்தம் கேட்ட சிறுத்தை, &lsquo;ஒரு கை பார்த்து விடலாம்&rsquo; என்று கிளம்பியது. சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்ற சிறுத்தை, திகைத்துப் போய் நின்றது. அது யானை அல்ல, யானைக் கூட்டம். வாலைச் சுருட்டிக் கொண்டு திரும்பியது. தூக்கம் வந்து படுத்து விட்டது. காலை யில் வேட்டையைத் தொடங்கலாம் என்று &nbsp;நடக்க ஆரம்பித்தது. அசதியாகத் தெரிந்தது. &nbsp;ஒருநாள் முழுக்க எதுவுமே சாப்பிட வில்லையே.. அன்றும் நாள் முழுக்க அப்படியே நகர்ந்தது. &nbsp;வழியில் டாக்டரைப் பார்க்கலாம் என்று சென்றது. கரடிக்கோ கொஞ்சம் நடுக் கம்தான். &lsquo;என்னவென்று தெரியவில்லையே&rsquo; என்ற யோசனையுடன் பார்த்தது. &nbsp;&ldquo;என்ன டாக்டரே... நீங்க சொன்ன மாதிரி &nbsp;நேத்துலருந்து சின்ன விலங்கோட மாமிசம் எதையும் சாப்பிடல.. ஏதாவது புள்ளி மறைஞ்சு ருக்கா..&rdquo; என்ன சொல்றதுனு தெரியாமல் முதலில் முழித்த கரடி சுதாரித்துக் கொண்டு, &ldquo;சரி... என்ன சாப்பிட்டீங்க...&rdquo; என்றது. &ldquo;நீங்க வேற, டாக்டரே.. .எதுவுமே கிடைக்கல.. சாப்பிடவே இல்ல..&rdquo; &ldquo;அப்புடி இருந்தா எப்புடி புள்ளி மறை யும்... எதையாவது சாப்புட்டே ஆகனும்..&rdquo; நகர்ந்தது சிறுத்தை. &nbsp;திடீரென்று சிறுத்தை வந்ததால் டாக்ட ரைப் பார்க்க வந்த மானும், அணிலும் ஒளிந்து இருந்தன. சிறுத்தை சென்றதும் வெளியில் வந்த இரண்டும்.. &ldquo;இது உங்க வேலைதானா... எதுக்கு இப்படி சொல்லி சமாளிக்குறீங்க.. புள்ளி மறைஞ்சுருமா..&rdquo; &ldquo;மறையாது... மறையாதுன்னு அதுக்கு தெரியுறவரைக்கும் நாம தப்பிச்சுட்டு இருப்போம்.. வேற எதயாவது சாப்புட்டுச்சுனா பெரிய விஷயம்தான்..&rdquo; &ldquo;சிறுத்தையும் புலியும் ஒரே இனம்தான.. புலி பசித்தாலும் புல்லைத் திங்காதே..?&rdquo; &nbsp;மானைப் பார்த்து, &ldquo;நீ மாமிசம் சாப்பிடு வியா..?&rdquo; - கரடி. &ldquo;ச்சீசீ.. சாப்பிட மாட்டேன்..&rdquo; &ldquo;இப்ப சாப்புடுற எதுவுமே கிடைக்க லேன்னா என்ன பண்ணுவ..&rdquo; &ldquo;கிடைக்குறத சாப்புடுவேன்..&rdquo; &ldquo;பாப்போம்... இங்க என்ன நடக்கு துன்னு.. இப்படி ஏதோ ஒரு கட்டாயம் வந்து தான் நம்ம விலங்கு இனத்தோட உண வுப்பழக்கம் உருவாச்சு..&rdquo; சிறுத்தைக்கு அன்றும் உணவு கிடைக்க வில்லை. கண்கள் சொருகுவது போல இருந்தது. வாலைப் பார்த்தது. புள்ளிகள் மங்க லாகத் தெரிந்தன. &lsquo;சிகிச்சை பலன் அளிக்கிறது போலும்&rsquo; என்று நினைத்தது. ஆனால் பசி வயிற்றைக் கிள்ளியது. தாக்குப்பிடிக்க முடிய வில்லை. &lsquo;கரடி சொன்னதைக் கேட்டால், புள்ளி களை மறைத்து விடலாம் போலிருக்கிறதே.. ஆனால், இந்தப் பசியை எப்படி மறைப்பேன்..&rsquo; அப்போது யாரோ அடுக்கி வைத்திருந்த புல்லை மான் சாப்பிடுவதைப் பார்த்தது. சிறுத்தையைப் பார்த்ததும் அது ஓடவில்லை. அப்போது அந்தப் பக்கம் வந்த நரியும், சிறுத்தை முன்னால் வந்து நடனமாடியது. மானுக்கும் உற்சாகம். சிறுத்தைக்கு வந்தது கோபம். நரி தப்பித்தது. மான் மாட்டிக் கொண்டது. கால் சதை கிழிந்தது. நொண்டிக் கொண்டே ஓடித் தப்பித்தது. சதையை ருசி &nbsp;பார்த்த சிறுத்தை, &ldquo;ரெண்டு நாளா இது இல்லாம எப்புடி இருந்தேன்&rdquo; என்று சாப்பிட்டது. சொருகிப் போயிருந்த கண்கள் கொஞ்சம் மலர்ந்தன. &nbsp;உடலில் இருந்த புள்ளிகள் நன்றாகத் தெரிந்தன. அதிர்ச்சியடைந்தது சிறுத்தை. &nbsp;&lsquo;கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, புள்ளி மங்கலா தெரிஞ்சுது... அச்சச்சோ... மாமிசம் சாப்புட்ட உடன இப்புடி ஆயிருச்சோ..&rsquo; புலம்பத் &nbsp;தொடங்கியது. உறங்கிப் போனது. மீண்டும் எழுந்தபோது வயிறு பசியில் சூடாக இருந்தது. &nbsp;&ldquo;எதுவுமே சாப்பிடாம இருந்தா எப்புடிப் புள்ளி மறையும்&rdquo; என்ற கரடியின் குரல் காதில் ஒலித்தது. &nbsp;அங்கு வைக்கப்பட்டிருந்த புல்லைப் பார்த்து அதன் அருகில் சென்றது. முதலில் புல்லை முகர்ந்தது சிறுத்தை. முகத்தைச் சுழித்தது. மீண்டும் முகர்ந்தது. முதலில் இருந்த அருவருப்பு இப்போது இல்லை. முகம் சுழிக்கவில்லை. அடுத்த முறை முகரச் சென்ற சிறுத்தை தனது நாவால் புல்லைச் சுற்றிச் சுழற்றி வாய்க்குள் செலுத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.