மே.வங்கத்தில் லெனின் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
6 May 2026, 10:58 pm
<p><strong>மே.வங்கத்தில் லெனின் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்</strong></p><p>சென்னை, மே 6 - மேற்கு வங்கத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கும், இடதுசாரி கட்சி அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது கடும் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன் விடுத்துள்ள அறிக்கையில், “மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முறைகேடான வழிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அங்கு அக்கட்சியினர் திட்டமிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரும், மாமேதையுமான லெனின் அவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைப் போலவே திரிபுராவிலும் இடதுசாரி கட்சி அலுவல கங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜகவின் இத்தகைய அராஜகப் போக்கும், வன்முறை அரசியலும் ஜனநாயகத்திற்கு எதிரானது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிகாட்டியான லெனினின் சிலையைச் சேதப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத் தின் மீதான மாபெரும் தாக்குதலாகும். இத்தகைய வன்முறைச் செயல் களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாஜகவின் இத்தகைய அராஜகப் போக்குகளைத் தடுத்து நிறுத்த, உழைக்கும் மக்களும், மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயக விரோதத் தாக்குதல்களை அனைவரும் ஒன்றி ணைந்து எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.</p>
