முந்தய பக்கம்

லெனின் தேர்வு நூல்கள் அறிமுக அமர்வு நிறைவு

7 Feb 2026, 5:37 pm
லெனின் தேர்வு நூல்கள் அறிமுக அமர்வு நிறைவு
<p><strong>லெனின் தேர்வு நூல்கள் அறிமுக அமர்வு நிறைவு</strong></p> <p>திருப்பூர், பிப்.7- மாமேதை லெனின் எழு திய 12 தேர்வு நூல்கள் அறி முகப்படுத்தும் அமர்வு திருப் பூரில் வெள்ளியன்று நிறைவு பெற்றது. &nbsp;புரட்சியாளர் லெனின் எழுதிய படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் கள் கட்டுரைகள் உரைகள் அடங்கியவை 12 தேர்வு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு நூல்கள் அறிமுக முதல் அமர்வு திருப் பூரில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி யது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் பங்கேற்று உரையாற்றி னார். இதைத்தொடர்ந்து இரண்டு வாரங்க ளுக்கு ஒரு முறை என்றபடி அடுத்தடுத்த தேர்வு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. &nbsp;இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் லெனின் தேர்வு நூல்கள் அமர்வு நடைபெற் றது. மாவட்ட குழு உறுப்பினர் பா.லட்சுமி தலைமையில் லெனினது 11ஆவது தேர்வு நூலை முன்வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ் உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் 12ஆவது தேர்வு நூலை முன் வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பிரவீன் குமார் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, சமகால அரசி யலை புரிந்து கொள்வதில் லெனின் நூல் களின் முக்கியத்துவத்தை விளக்கி சிறப்புரை யாற்றினார். இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட கல்விக் குழு கன்வீனர் ஆர்.மைதிலி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram