முந்தய பக்கம்

உச்சத்தைத் தொட்ட எலுமிச்சைப் பழம் விலை

1 hour before
உச்சத்தைத் தொட்ட எலுமிச்சைப் பழம் விலை

உச்சத்தைத் தொட்ட எலுமிச்சைப் பழம் விலை

அவிநாசி, செப். 14– திருப்பூர் மாவட்டத்தில் எலுமிச்சைப் பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீடுகள், உணவகங்கள் மற்றும் ஜூஸ் கடைகளில் அன்றாடம் தேவைப்படும் எலுமிச்சைப் பழம், ஒட்டன்சத்திரம், போடி, தேனி, பழனி, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது போதிய மழையின்மையால் சாகுபடி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.அவிநாசி பகுதியில் பெரிய எலுமிச்சைப் பழம் ஒன்று ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், சிறிய பழம் ரூ.15-க்கும் விற்பனையாகிறது. இதனால் நுகர்வோரின் செலவு அதிகரித்துள்ளது.

அதேநேரம், விவசாயிகள் பெறும் கொள்முதல் விலைக்கும் நுகர்வோர் வழங்கும் விலைக்கும் இடையே கணிசமான வேறுபாடு நிலவுகிறது. வரத்து குறைவைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் கூடுதல் லாபம் ஈட்டுகின்றனரா என்றகேள்வியும் எழுந்துள்ளது.எனவே, வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, செயற்கையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரிய லாபமும், நுகர்வோருக்கு நியாயமானவிலையில் எலுமிச்சையும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram