தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றச் செய்திகள் கேள்வி நேரத்திலிருந்து...

22 Jan 2026, 2:57 pm
சட்டமன்றச் செய்திகள் கேள்வி நேரத்திலிருந்து...
<p><strong>சட்டமன்றச் செய்திகள் கேள்வி நேரத்திலிருந்து...</strong></p> <p>கந்தர்வகோட்டையில் ஆய்வு மாளிகை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சுற்றுலா ஆய்வு மாளிகை அமைத்து தரவேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை க்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, &ldquo;கந்தர்வகோட்டையில் ஆய்வு மாளிகை 2026-27 நிதியாண்டில் நிச்சயம் கட்டித் தரப்படும்&rdquo; என்றார். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலத்தில் ஒரு ஆய்வு மாளிகை கட்டித் தரப்படும், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆய்வு மாளிகை புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாடு முழு வதும் 58 ஆய்வு மாளிகைகள், 48 சுற்றுலா &nbsp;மாளிகைகள், 21 விருந்தினர் மாளிகைகள் என ஒட்டுமொத்தமாக 115 மாளிகைகள் இருப்பதாக தெரிவித்தார். பூந்தமல்லியில் &nbsp;100 ஏக்கரில் அமையும் திரைப்பட நகரம் &nbsp;காரைக்குடியில் திரைப்பட நகரம் அமைக்க தற்போதை க்கு சாத்தியக்கூறு இல்லை என்றும் திரு வள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 100 ஏக்கரில் முதல் கட்டமாக திரைப்பட நக ரம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார். கிராமங்களின் பெயர்கள் &nbsp;தமிழிலேயே &nbsp;தொடர நடவடிக்கை &ldquo;தமிழ்நாடெங்கும் கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்!&rdquo; தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ் மொழியில் இருந்த &nbsp;கிராமப் பெயர்கள் மாற்றப்பட்டு வருவ தாக பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இவ்வாறு பதிலளித்தார். திருப்பூர் மேம்பாட்டுக்கு தனிக்கவனம் திருப்பூரில் குப்பை கொட்டுவதற் காக அதிமுக ஆட்சியில் எந்த &nbsp;தொலைநோக்கு திட்டங்களும் செயல் படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் தான் நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் 25 &nbsp;ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு குப்பை கள் சேகரிக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற் கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது. திருப்பூரின் ஒவ்வொரு பிரச்ச னையும் தனித்தனியாக கவனித்து தீர்வுகாண திராவிட மாடல் அரசு நட வடிக்கை எடுக்கிறது. சாயப் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, ரயில்வே பிரச்சனை என அனைத்து முக்கி யமான விஷயங்களுக்கும் தனிக்கவ னம் செலுத்தி நகரத்தை முற்றிலும் மேம் படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்தார். திருப்பூரிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பு சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக் கும் திட்டம் செயல்படுகிறது. திருப்பூரி லும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயா ராக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 22 லட்சம் பேருக்கு &nbsp;பட்டா வழங்கியுள்ளோம்! &ldquo;திமுக ஆட்சியில் இதுவரை 22 &nbsp;லட்சம் நபர்களுக்கு பட்டா &nbsp;வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்ச ரின் சீரிய முயற்சியால் சென்னையை யொட்டிய பகுதிகளில் உள்ள 8,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விடுபட்ட மக்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; என்று &nbsp;அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். குற்றச் சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை! &ldquo;தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. குற்றங்களைக் குறைத்து சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிறைச்சாலைகளை அதிகப் படுத்துவதற்குப் பதிலாக, குற்றம் இழைத்தவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கி நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறைத்துறை மேற்கொள் கிறது. எனவே கலசப்பாக்கத்தில் உள்ள சிறைச்சாலை தற்போது அவசியமில்லை&rdquo; என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.