சட்டமன்ற தேர்தல் களம் தேர்தல் அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ மனு
21 Mar 2026, 2:42 pm

சட்டமன்ற தேர்தல் களம் தேர்தல் அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ மனு

ஈரோடு, மார்ச் 21- தேர்தல் பணிகளில் அரசு ஊழி யர் மற்றும் ஆசிரியர்கள் சந்திக் கும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண் பது குறித்த மனுவை மாவட்ட தேர் தல் அலுவலரிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வழங்கினர். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கான தேர்தல் ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடுவ தில்லை. கணிசமான அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடுகின்ற னர். இப்பணிகளில் ஈடுபடும் போது அவர்கள், குறிப்பாக பெண் ஆசிரி யர்கள், ஊழியர்கள் சந்திக்கும் சிர மங்கள் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சனியன்று மாவட்ட தேர்தல் அலுவலர் ச.கந்தசாமியி டம் மனு அளித்தனர். இந்நிகழ் வில் அமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ச.விஜயமனோ கரன், ப.சரவணன் உள்ளிட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர்.