தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்ற தேர்தல் களம் எஃகு கோட்டையான சேலம்: ஒரு பார்வை

19 Mar 2026, 3:18 pm
சட்டமன்ற  தேர்தல்  களம் எஃகு கோட்டையான சேலம்: ஒரு பார்வை
<p><strong>சட்டமன்ற &nbsp;தேர்தல் &nbsp;களம்&nbsp;எஃகு கோட்டையான சேலம்: ஒரு பார்வை</strong></p> <p>தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத மையப் புள்ளியான சேலம் மாவட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மாம்பழம், எஃகு மற்றும் ஜவுளித் தொழிலுக்கு பெயர் பெற்ற &nbsp;இந்த மாவட்டம், அரசியல் ரீதியாக &rsquo;மேற்கு மண்ட லத்தின் இதயம்&rsquo; எனக் கருதப்படுகிறது. 11 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில், இம் முறை அனல் பறக்கும் அரசியல் யுத்தம் தொடங்கி யுள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி இங்கு அசுர பலத்தை காட்டியது. கெங்கவல்லி, ஆத்தூர் (தனி), ஏற்காடு(தனி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் 10 இடங் களை அதிமுக கூட்டணி (அதிமுக-8, பாமக-2) கைப் பற்றியது. திமுக ஒரே ஒரு இடத்தில் (சேலம் வடக்கு) மட்டுமே வெற்றி பெற்று தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது. &nbsp;மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 27.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. &bull;&nbsp;&nbsp; &nbsp;ஆண் வாக்காளர்கள்: 13.70 லட்சம் &bull;&nbsp;&nbsp; &nbsp;பெண் வாக்காளர்கள்: 13.84 லட்சம் &bull;&nbsp;&nbsp; &nbsp;மாற்றுப் பாலினத்தவர்: 320 &bull;&nbsp;&nbsp; &nbsp;மொத்தம்: 27,55,108 வாக்காளர்கள். மாவட் டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி யாக சேலம் மேற்கு திகழ்கிறது. &nbsp;சேலத்தின் தேர்தல் முடிவுகளை இங்குள்ள தொழில்துறையினரின் கோரிக்கைகளே தீர்மானிக்கப் போகின்றன. &bull;&nbsp;&nbsp; &nbsp;சேலம் எஃகு ஆலை: பொதுத்துறை நிறுவ னமான எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுவதை தடுப்பது தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை. &bull;&nbsp;&nbsp; &nbsp;ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு: விவசாயி களுக்கு நியாயமான விலை மற்றும் அரசு சார்பில் ஜவ் வரிசி ஆலை அமைப்பது நீண்டகால எதிர்பார்ப்பு. &bull;&nbsp;&nbsp; &nbsp;நெசவாளர் வாழ்வாதாரம்: இளம்பிள்ளை பட்டு &nbsp;மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு மின்கட்டண குறைப்பு மற்றும் தனி ஜவுளிப் பூங்கா அமைப்பது அவசி யமான ஒன்றாக உள்ளது. &bull;&nbsp;&nbsp; &nbsp;உட்கட்டமைப்பு: சரபங்கா உபரி நீர் திட்டத்தின் முழுமையான அமலாக்கம் மற்றும் ஏற்காடு மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு. சேலம் மாநகராட்சியின் முக்கிய வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உள்ளடக்கிய சேலம் வடக்கு தொகுதி, மீண்டும் ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்தி ரன் இருந்து வருகிறார். சுமார் 2.36 லட்சம் வாக்கா ளர்களை கொண்ட இந்த தொகுதியில், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் அதி களவில் வசிக்கின்றனர். நிறைவேற்றப்பட்ட பணிகள்: &bull;&nbsp;&nbsp; &nbsp;பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அரசு அருங்காட்சியகம். &bull;&nbsp;&nbsp; &nbsp;சிறப்பாக செயல்படுத்தப்படும் முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டம். &bull;&nbsp;&nbsp; &nbsp;சாக்கடை கால்வாய், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளில் முன்னேற்றம். &bull;&nbsp;&nbsp; &nbsp;நியாய விலைக் கடைகளின் தரம் உயர்த்தப் பட்டுள்ளது. தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகள்: ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, அழகாபுரம் சந்திப்பு களில் அலுவலக நேரங்களில் நிலவும் கடும் நெரி சலை தவிர்க்க மேம்பாலங்கள் மற்றும் சாலை விரி வாக்கம் அவசியம். அழகாபுரம், அம்மாபேட்டை பகுதி களில் காவேரி குடிநீர் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;அரசியல் கணக்குகள்: அதிமுகவின் செல்வாக்கு மிக்க பகுதி என கருதப் படும் சேலத்தில், இம்முறை ஆளுங்கட்சியான திமுக சாதனைகளை முன்வைத்து கூடுதல் தொகுதிகளை வெல்ல வியூகம் வகுக்கிறது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் திமுக மீது மக்களின் கவ னம் திரும்பியுள்ளது. பாமகவின் பிரிவு மற்றும் தமிழக &nbsp;வெற்றிக் கழகத்தின் வரவு ஆகியவை, இம்முறை அதி முகவின் சறுக்கலுக்கு மிக முக்கியமான காரண மாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருது கின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.