தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

20 Feb 2026, 2:39 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேதி குறிப்பிடாமல்  சட்டப்பேரவை ஒத்திவைப்பு

16 ஆவது தமிழக சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவுற்றது. 2025–26 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை அறிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் உரையாற்றினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து சட்டமன்றத் தலைவர் மு. அப்பாவு நிறைவுரை வழங்கினார். அடுத்த கூட்டத்தொடருக்கான தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இடைக்கால பட்ஜெட் விவாதம்:  அதிமுக, பாஜக புறக்கணிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை  கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம் வெள்ளிக்கிழமை  பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டின் முன்பண மானிய  கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மற்றும்  இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்க ளுக்கு முறையே நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் பதிலுரையாற்றினர்.  2025-26 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மற்றும் 2026-27 ஆண்டின் முன்பண மானிய கோரிக்கைகள் விவாதமின்றி வாக்கெடுப்பில் நிறை வேற்றப்பட்டன. எனினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் அன்றைய அவை நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக  மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் சபை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்தனர்.  இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு  எம்எல்ஏவான அய்யப்பன், பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, அருள் ஆகிய நான்கு பேர் பேரவை  நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே  வர வேண்டும்: அதிமுக எம்எல்ஏ வாழ்த்து!

16 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக நடவடிக்கைகளை புறக்கணித்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏவான உசிலம்பட்டி தொகுதி  அய்யப்பன் பேரவை நடவடிக்கையில் பங்கேற்று, வரும் சட்ட மன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். சத்துணவுத் திட்டத்தை இன்றும் பாராட்டிக் கொண்டிருப் பதைப் போல, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  தமிழ்ச் சமூகம் உள்ளவரை போற்றிக் கொண்டே இருக்கும்  என்று கூறிய அய்யப்பன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆசியுடன் மு.க. ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்று வாழ்த்தினார். ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அய்யப்பனின் இந்த வாழ்த்துரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.