தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தென்னிந்தியாவின் இசையரசி’ எஸ்.ஜானகி மறைந்தார்!

11 Jul 2026, 9:30 pm
‘தென்னிந்தியாவின் இசையரசி’ எஸ்.ஜானகி மறைந்தார்!

‘தென்னிந்தியாவின் இசையரசி’ எஸ்.ஜானகி மறைந்தார்!

சென்னை, ஜூலை 11- தென்னிந்தியாவின் “இசையரசி”, “கானக் குயில்” என்று போற்றப்பட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, சனிக் கிழமை (ஜூலை 11) இரவு, மைசூரில் உறவினர் வீட்டில் இருந்தபோது காலமானார். அவருக்கு வயது 88. எஸ்.ஜானகியின் மறைவு, இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆறு தலைமுறைகளை கடந்த இசைப் பயணம்

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957- ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ திரைப்படம் மூலம் திரையிசைப் பய ணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், இந்தி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழி களில் 40 ஆயிரத்திற்கும் அதி கமான (சில கணக்குகளின் படி 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட) பாடல்களைப் பாடி, ஆறு தலைமுறைகளாக ரசி கர்களின் இதயங்களில் இசையாட்சி நடத்தினார்.

இசை உலகின் மறக்க முடியாத குரல்

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பா ளர்களுடனும், பி.பி. ஸ்ரீனி வாஸ், கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பாடகர்களுடனும் இணைந்து எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல் களை வழங்கினார். 2017 -ஆம் ஆண்டு திரையிசை யிலிருந்து ஓய்வை அறி வித்தார். குடும்பம் ஜானகியின் கணவர் ராம் பிரசாத், ஏற்கெனவே கால மாகி விட்ட நிலையில், அவ ரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயி ரிழந்தார். இந்நிலையி லேயே தற்போது எஸ். ஜான கியும் மறைந்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூ ரில் அவரது உறவினர் வீட் டில் வைக்கப்பட்டுள்ள உட லுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது இனிமையான குர லாலும், உணர்வுகளை உயிர்ப்பிக்கும் பாடல் வெளிப்பாட்டாலும் கோடிக் கணக்கான ரசிகர்களின் மன தில் நீங்கா இடம்பிடித்த எஸ். ஜானகி, உடலால் மறைந்தா லும், அவரது குரல் என்றென் றும் இசை உலகில் ஒலித் துக்கொண்டே இருக்கும். அவரது மறைவுக்கு திரை யுலகினரும், இசைக் கலை ஞர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.