தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடதுசாரிகளும், இலவச ஆலோசகர்களும் - மதுரை சொக்கன்

26 Sept 2026, 10:09 pm
இடதுசாரிகளும்,  இலவச ஆலோசகர்களும் - மதுரை சொக்கன்

இடதுசாரிகளும், இலவச ஆலோசகர்களும் - மதுரை சொக்கன்

கம்யூனிஸ்ட்டுகளின் மீது கல்லெறிவதற்காகவே சிலர் குவாரிகளை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் என்று பல்வேறு பெயர்களில் உலவும் இவர்கள் இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று இடைவிடாமல் வகுப்பெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்க

ளை காதுகொடுத்துக் கேட்பவர்கள். அந்த விமர்சனத்தில் ஒரு சதவீதம் உண்மை இருந்தால் கூட அதை ஒப்புக்கொள்பவர்கள். ஆனால், மற்ற பல கட்சிகள் மீது சிறு விமர்சனம் வைக்கப்பட்டால் கூட வார் ரூமைத் திறந்துவிட்டு வக்கிரமாகத் திட்டவைப்பார்கள்; வாலியர்களை ஏவிவிடுவார்கள். வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத ஒரு பண்பாக விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை ஒரு அமைப்பு நடைமுறையாகவே கம்யூனிஸ்ட்டுகள் கைக்கொண்டுள்ளனர். சுயவிமர்சனம் என்பது பரலோகத்தை நோக்கிச் கேட்கப்படும் பாவமன்னிப்பு அல்ல; மாறாக, தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஒரு ஒழுங்குமுறை.

ஆனால், தற்போது சிலர் இடதுசாரிக் கட்சிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என்பது ஒரு அரசியல் முடிவு; காலத்தின் தேவை கருதி, களத்தைக் கருத்தில் கொண்டு, ஆய்ந்து எடுக்கப்பட்ட முடிவு.

தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்துக்கொண்டே இடைத்தேர்தல் களத்தில் எப்படி இடதுசாரிக் கட்சிகள் போட்டியிட முடியும் என்று இவர்கள் கேட்கிறார்கள். அதில் ஒரு மணியானவர், இரண்டு பேரைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஒரு லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு, தாம் பேசுவதை உலகமே உற்றுநோக்குவதாகவும் இவருடைய வார்த்தையின் வழியிலேயே தமிழக அரசியல் பயணம் செய்ததாகவும் கருதிக் கொள்பவர். தேர்தல் முடிந்தவுடன் கம்யூனிஸ்ட்டுகளைக் கழற்றிவிடுங்கள் என்று தவெகவுக்கு ஆலோசனை வழங்குகிறார். இவர் அரசியல் விமர்சனம் என்ற பெயரில் நீண்டகாலமாக அவித்த முட்டையில் ஆம்லேட் போட முயல்பவர்.

தவெக அரசின் அங்கமாக இடதுசாரிக் கட்சிகள் இல்லை; அந்தக் கூட்டணியிலும் இல்லை. ஆனால், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்ப

தாக இடதுசாரிக் கட்சிகள் தெளிவாக அறிவித்தன. இரண்டிரண்டு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு உங்களுக்கு இவ்வளவு பேச்சா என்று கேட்கிறார் இவர். இந்த நான்கு எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தால்தான் அன்றைக்குத் தவெக ஆட்சிக்கு வர முடிந்தது என்பதை மறந்துவிட முடியாது. அப்போதும் கூட இவர் மழைக்காலத் தவளை போல உளறிக்கொண்டுதான் இருந்தார்.

வரலாற்றுப் பின்னணி

1977ஆம் ஆண்டு அவசரநிலைக் காலத்திற்கு அடுத்து வந்த தேர்தலில் இந்தியாவில் முதன்முறையாகக் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்தது. ஜனசங்கமாக இயங்கி வந்த ஆர்எஸ்எஸ் பரிவாரம் ‘ஜனதா’ என்ற பெயரில் உரு

வான கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் அப்போது அந்த ஆட்சியை வெளியிலிருந்தே ஆதரித்தன. உள்ளே சென்ற ஜனசங்

கத்தினர் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தனர். இதுதொடர்பான பிரச்சனை வெடித்தபோது குடைச்சல் கொடுத்து ஜனதா ஆட்சியைத் கவிழ்த்தவர்

கள்தான் ஜனசங்கத்தினர். அதன்பிறகு அவர்கள் பாஜகவாக அவதாரம் எடுத்தார்கள்.

வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியை இடதுசாரி கட்சிகள் வெளி

யிலிருந்து ஆதரித்தன; பாஜகவும் வெளியிலிருந்து ஆதரித்தது. மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை வி.பி. சிங் நடை

முறைப்படுத்த முயன்றபோது, ராமர்கோவில் கட்ட ரதயாத்திரை என்று சொல்லி ஆட்சி

யைத் கவிழ்த்தது பாஜகதானே தவிர இடதுசாரிகள் அல்ல. சமூக நீதிக்கு ஆதரவாக

வும், மதவெறிக்கு எதிராகவும் போராடிய அந்த அரசுக்கு இடதுசாரிகள் துணை

நின்றார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரித்தன. குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றை வலியுறுத்தி இடதுசாரிகள் அதனைக் கொண்டுவந்தனர்.

இப்போதும் கூட, “தவெக ஆட்சி நல்லது செய்தால் வரவேற்போம், கெட்டது செய்தால் எதிர்ப்போம்” என்று அறிவித்துவிட்டுத்தான் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளன; அதன்படியே செயல்பட்டுவருகின்றன. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பாஜகவின் கைப்பாவையாக விளங்கும் ஆளுநரின் சதிவிளையாட்டுக்களமாகவே தமிழக அரசியல் களம் மாற்றப்பட்டிருக்கும்.

களமும் மக்களும்

இடைத்தேர்தல் களமும் கூட தனிப்பட்ட நபர்களின் சவால், சவடால் என்றே மாற்றப்படும் நிலையில் இடதுசாரிக் கட்சிகள்தான் மக்கள் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. விலைவாசி உயர்வைப் பற்றி, நூறுநாள் வேலைத்திட்டம் சீரழிக்கப்படுவது பற்றி, வேலையின்மை பற்றி இடதுசாரிக் கட்சிகள்தான் மக்களிடம் பேசுகின்றன.

இப்போது பேசும் இடதுசாரிகளின் திமுக ஆட்சியின் போது ஏன் பேசவில்லை என்று கேட்பது அபத்தம். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் என்றாலும், 8 மணி நேர வேலை முறையை மாற்றி நேரக்கணக்கின்றித் தொழிலாளர்களைச் சுரண்டலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இடதுசாரிக் கட்சிகள்தான் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்குத் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுசரணையான சட்டம், அன்றைக்குத் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டபோதும் எதிர்த்தவர்கள் இடதுசாரிகள்தான்.

மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர், “பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்; ஆனால், திமுகவும் பாஜகவும் ஒன்றுதான்” என்று பேசியுள்ளார். பாஜக என்பது வெறும் பூச்சாண்டி அல்ல என்பதை, தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்தும் தவெகவை ஆட்சி அமைக்கவிடாமல் ஆளுநர் தடுத்த போதே புரிந்துகொண்டிருப்பார்கள். இப்போது எஸ்ஐஆர் (SIR) என்ற பெயரில் தலைமைத் தேர்தல் ஆணையரை எவ்வாறு பாஜக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் விட்டுள்ளார்கள் என்பதைச் சக தேர்தல் ஆணையர்களே அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே புரிந்திருக்கும், பாஜக என்பது வெறும் பூச்சாண்டி விளையாட்டு அல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அபாயம் என்று! திமுகவை விமர்சிக்கும் தவெக, பாஜகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன் என்பதுதான் இடதுசாரிக் கட்சிகள் எழுப்பும் கேள்வி.

ஜெம் வீரமணியிடம் சிபிஎம் தேர்தல் நிதி வாங்கியது என்று அறம் பேசும் ஒரு பத்திரிகையாளர் அவதூறு செய்தார். “நாங்கள் அவரிடம் நிதி பெறவில்லை; இந்தக்

குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பகிரங்கமாகவே கூறினார். ஆனால், அறம் பேசும் அவர் இதுவரை வாய்திறக்கவில்லை. இது அறமா? அல்லது குப்பையை மட்டுமே புடைக்கும் முறமா?

இடைத்தேர்தலையும் ஒரு அரசியல் போராட்டத்தின் களமாகக் கருதி அறத்துடன் போராடும் இடதுசாரிகளை மனச்சாட்சியுள்ள ஊடகவியலாளர்கள் மனந்திறந்து பாராட்டு

கிறார்கள்; மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இடதுசாரி

களின் இருப்பையே சகிக்க முடியாத சிலர், அழுக்கை அள்ளி வீசுவதாக எண்ணித் தங்களையே அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.