இடதுசாரி, மாணவர், வாலிபர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
20 May 2026, 1:05 am
<p><strong>இடதுசாரி, மாணவர், வாலிபர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் </strong></p><p>மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்ய கோரியும், என்.டி.ஏ அமைப்பை கலைக்க வலியுறுத்தியும், இடதுசாரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் அமைப்பு சார்பாக திருப்பாதிரிப்புலியூரில் செவ்வாயன்று (மே.19) மாலை வாலிபர் ஒன்றிய செயலாளர் கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ, ஏஎஸ்எப்ஐ, ஏஒய்எப்ஐ அமைப்பினர் கலந்து கொண்டனர்.</p><p>சென்னை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பணி புரியும் இளநிலை உதவியாளரை தாக்கிய பெண் டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை கறுப்பு பட்டையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
