தெலுங்கானா, அசாம், உத்தரகண்ட் மாநிலக் கல்லூரிகளில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் அபார வெற்றி
1 Oct 2026, 10:32 pm

தெலுங்கானா, அசாம், உத்தரகண்ட் மாநிலக் கல்லூரிகளில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் அபார வெற்றி

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி படுதோல்வி

ஹைதராபாத்தெலுங்கானா, அசாம், உத்தரகண்ட் மாநிலக் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில், இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) தலைமையிலான இடதுசாரி மாணவர் அமைப்புகள் அபார வெற்றிபெற்றுள்ளன.

ஹைதராபாத் பல்கலைக்கழகம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ), தலித் மாணவர் சங்கம், தெலுங்கானா மாணவர் சங்கம் மற்றும் அம்பேத்கர் மாணவர் சங்கம் ஆகியவை அடங்கிய இடதுசாரி மாணவர் கூட்டணி 4 முக்கிய பதவிகளைக் கைப்பற்றியது.

தலைவராக எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த தில்ஷாதா ரிகான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்எப்ஐ-யின் கொர்ரா நிதின் சௌகான் துணைத் தலைவராகவும், அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் பிரதீக் பொதுச் செயலாளர் பதவியையும், ஏஐஎஸ்ஏ-வின் சித்தாந்த்இணைச் செயலாளர் பதவியையும் வென்றனர்.

கடந்த தேர்தலில் அனைத்துஇடங்களையும் வென்ற ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி - சேவாலால் வித்யார்த்தி தளம் (எஸ்எல்விடி) கூட்டணி தற்போது ஒரே ஒரு பதவியை (விளையாட்டுச் செயலாளர் - பனோத் சாய்) மட்டுமேகைப்பற்றியுள்ளது. கலாச்சாரச் செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவு நிலுவையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட மோதல் காரணமாகத் தேர்தல் முடிவுகள்உடனடியாக அறிவிக்கப்படவில்லை.இத்தகைய சூழலில், இடதுசாரி மாணவர் அமைப்புகளின் அபார வெற்றி காரணமாக ஹைதராபாத்பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைமையை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பிடமிருந்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீட்டுள்ளன.

அசாமில் இந்திய மாணவர் சங்கம் கலக்கல்

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் மரியானி கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பொதுச் செயலாளர், விவாதச் செயலாளர், சமூக சேவைச் செயலாளர் மற்றும் விளையாட்டுச் செயலாளர் போன்றமுக்கியப் பதவிகளை எஸ்எப்ஐ கைப்பற்றி அசத்தியுள்ளது. மரியானி கல்லூரி மாணவர் பேரவைத் வரலாற்றில் எஸ்எப்ஐ இத்தகைய முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.

டேராடூன் டி.ஏ.வி. பி.ஜி. கல்லூரி

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் டி.ஏ.வி.பி.ஜி. கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில், துணைத் தலைவர்பதவியை எஸ்எப்ஐ கைப்பற்றியுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்எப்ஐ-யின் ஷைலேந்திர சிங் துணைத் தலைவர் பதவியை வென்றார். டி.ஏ.வி. பி.ஜி. கல்லூரியின் வரலாற்றில் எஸ்எப்ஐ துணைத் தலைவர் பதவியை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

‘ஜென் ஸி’ தலைமுறையினரிடமிருந்து எஸ்எப்ஐ-க்கு ஆதரவு பெருகி வருகிறது

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பாராட்டு

சமீபத்தில் வெளியான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் அறிக்கையின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ-க்கு ஜென் இசட் (ஜென் ஸி) தலைமுறையினரிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல மாணவர் போராட்டங்களின் வெற்றி, மாணவர் சமூகத்தின் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே இதற்குக் காரணமாகும். தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் இந்தியாவின் கல்வித்துறையைக் காவிமயமாக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக எஸ்எப்ஐ மற்றும் பிற இடதுசாரி மாணவர் அமைப்புகள் வளாகங்களில் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான போராட்டங்களின் தாக்கத்தையே மாணவர் பேரவைத் தேர்தல் வெற்றிகள் பிரதிபலிக்கின்றன என அதில்கூறப்பட்டுள்ளது.