‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
1 Jul 2026, 10:23 pm
<p><strong>‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 1 – நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புத னன்று (ஜூலை 1) தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் - வாலிபர் - மாதர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ‘நீட்’ வினாத்தாள் கசிவு, மறுதேர்வு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமை யை (NTA) கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டங் களில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன. தென்சென்னை மாவட்டம் சார்பில் அசோக் பில்லரில் நடைபெற்ற போராட்டத் தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லத் தலைவர் சி. மிருதுளா கலந்துகொண் டார். மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சரவணசெல்வி (ஜனநாயக மாதர் சங்கம்), அன்பு (இளைஞர் பெரு மன்றம்), என். குமரன் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
