முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

2 Jul 2026, 2:08 am
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

​​​​​​​ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குளறுபடி ஏற்படுத்தும் தேசிய தேர்வு முகமை ரத்து செய்து, மாணவர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாநிலத்தின் உரிமையை மதிக்க வேண்டும்.

குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தேசிய மாதர் சம்மேளனம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் உள்ளிட்ட இடதுசாரி வெகுஜன இயக்கங்களின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி, தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram