முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் டிச.8 இடதுசாரி-விசிக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

27 Nov 2025, 3:11 pm
கள்ளக்குறிச்சியில் டிச.8 இடதுசாரி-விசிக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
<p>கள்ளக்குறிச்சி, நவ.26 &ndash; &nbsp;தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் டிச.8 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்யும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அருகே உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய் சங்கர் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் கே. ராமசாமி, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் டி. கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் இரா. மதியழகன், கு. அறிவுக்கரசு உள்ளிட்ட அனைத்து இடதுசாரி மற்றும் விசிக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram