இடதுசாரி கட்சித் தலைவர்கள் சந்திப்பு கூட்டுச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை
5 Jun 2026, 8:48 pm
<p><strong>இடதுசாரி கட்சித் தலைவர்கள் சந்திப்பு கூட்டுச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை</strong></p><p>சென்னை, ஜூன் 5 - தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளில் கூட்டாக செயல்படுவது குறித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில், வெள்ளிக் கிழமை (ஜூன் 5) அன்று நடைபெற்ற இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செய லாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஐ(எம்) சார்பில் மத்தியக்குழு உறுப்பி னர்கள் பி. சம்பத், என். குணசேகரன், சிபிஐ சார்பில் மாநிலத் துணைச்செயலாளர் எம். ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் க. சந்தானம், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் வீ. சங்கர், எஸ். குமாரசாமி, மத்தியக்குழு உறுப்பினர் எஸ். பாலசுந்தரம் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p>
