முந்தய பக்கம்

இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்

6 May 2026, 1:10 am
இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்

இடதுசாரிகள் – விசிக ஆலோசனை கூட்டம்

ஈரோடு, மே 5- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து வியாழ னன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவது குறித்த, இடது சாரிகள் மற்றும் விசிக நிர்வாகிகள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் ஈரோடு, நாமக்கல் மாவட் டங்களில் நடை பெற்றது.

வணிக சமை யல் எரிவாயு விலை உயர்வைக் கைவிட வேண் டும், பணியிட குறைப்பை ரயில்வே நிர்வா கம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி 7 ஆம் தேதி ஒன் றிய அரசை கண் டித்து நடத்திட இடதுசாரி கட்சி கள் மற்றும் விசிக வினர் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகர மாக்குவது குறித்த ஆலோசனை கூட் டம் ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில், சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை ஏற்றார்.

இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ (எம்எல்) வி ஜெ.பி.கார்த்தி கேயன் மற்றும் விசிக மாநகர செயலா ளர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

இதில், ஜவான் பவன் முன்பு காலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளா னோரை பங்கேற்க வைப்பது என முடி வெடுக்கப்பட்டது.

நாமக்கல் இதேபோன்று, நாமக்கல்லின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாவட்டச்செய லாளர் க.அன்புமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கட்சி செயற்குழு உறுப் பினர்கள் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி, ஏ. டி.கண்ணன் மற்றும் விசிக மண்டலச் செயலாளர் பழமணிமாறன், மண்டல துணைச்செயலாளர் வே.காமராஜ், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

Share
FacebookXWhatsAppTelegram