முந்தய பக்கம்

இடதுசாரிக் கட்சிகள் 10 தொழில் நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!

21 Jan 2026, 2:28 pm
இடதுசாரிக் கட்சிகள் 10 தொழில் நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!
<p><strong>இடதுசாரிக் கட்சிகள் 10 தொழில் நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!</strong></p> <p>இந்தியப் பொருட்கள் மீது, ஏற்கெனவே விதித்த 50 சத விகிதம் வரிகளால், இந்திய மற்றும் தமிழ்நாட்டுத் தொழில்துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலை யில், இந்த வரியை 500 சதவிகித மாக உயர்த்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்கா, அது தொடர்பான மசோதாவையும் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த &nbsp;அச்சுறுத்தலைக் கண்டித்து, வியாழக் கிழமையன்று (ஜன. 22) தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், &nbsp;கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 தொழில் நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து கின்றன. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ &nbsp;மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்-எல்-லிபரேசன்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்கின்றனர். சிறப்புக் கட்டுரை : 4</p>
Share
FacebookXWhatsAppTelegram