நல்லாட்சி தொடர்ந்தால் ஆதரவும் தொடரும்
1 hour before
<p><strong>நல்லாட்சி தொடர்ந்தால் ஆதரவும் தொடரும்</strong></p><p>விருதுநகர், ஜூன் 23- தவெக அரசு நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கும் பட்சத்தில், அதற்கான ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து வழங்கும் என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஒன்றிய பாஜக அரசைக் கண் டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகதாது அணை விவகாரம் என்பது இரண்டு மாநிலங்களின் உரிமை மட்டு மல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் கூட்டாட்சி தத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சனை என்றும், எந்த சூழலிலும் அந்த அணை கட்டப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் ஒன் றிய அரசு வெறும் பார்வையாளராக இல்லா மல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தடை யின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என் றும், தற்போதைய 100 நாட்கள் வேலை வாய்ப்பை குறைந்தபட்சம் 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களை 44-இலிருந்து 4 சட்டங்களாக ஒருங்கி ணைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அந்த சட்டங்களை தமிழ்நாட்டில் அமல் படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறி விக்க வேண்டும் என்றார். தவெக அரசைப் பற்றி கருத்து தெரி வித்த அவர், புதிய அரசுக்கு நல்லாட்சியை வழங்குவதற்கான வாய்ப்பும் கால அவ காசமும் வழங்கப்பட வேண்டும் என்றார். அதேவேளையில், சட்டம்-ஒழுங்கு பராம ரிப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தை களின் பாதுகாப்பு போன்ற விஷயங்க ளில் எந்த கால அவகாசமும் தேவை யில்லை என்றும், அவற்றில் உடனடி நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். “குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் சமூகக் கல்வி அவசியம். சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு அதி கரித்தால் மட்டுமே குற்றங்களை கட்டுப் படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். தவெக அரசுக்கு ஆதரவு வழங்குவது இடதுசாரி கட்சிகள் இணைந்து எடுத்த அரசியல் முடிவு என்றும், அது யாருடைய கட்டாயத்தாலும் எடுக்கப்பட்டதல்ல என் றும் கூறிய அவர், “இந்த அரசு மதச்சார் பற்ற கொள்கையை கடைப்பிடித்து மக்க ளுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும். நல் லாட்சி தொடரும் வரை எங்களது ஆதரவும் தொடரும்” என்றார். மேலும், சட்டமன்றம் என்பது ஒரு வரை ஒருவர் கேலி செய்யும் இடம் அல்ல என்றும், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஜனநாயகத்தின் இரண்டு முக்கிய தூண் கள் என்றும் குறிப்பிட்டார். “முதல்வர் எவ் வாறு பேசுகிறார் என்பது முக்கியமல்ல; அவர் எந்தக் கொள்கை வழியில் செயல்படு கிறார் என்பதே முக்கியம்” என்று வீர பாண்டியன் தெரிவித்தார்.</p>
