தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!

20 May 2026, 11:08 pm
அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!

அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால், ஆதரவு மறுபரிசீலனை!

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக, சென்னையில் இடதுசாரிக் கட்சி கள் சார்பில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தி யாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பதிலளித்தார்.

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, “தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ப தை, ஏற்கெனவே இடதுசாரிகள், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்துதான் எடுத்திருக்கிறோம்.

ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்ற யோசனை விடுதலைச் சிறுத்தை களிடம் இருந்தால், அதைப்பற்றி அவ ர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் ஒரு வாய்ப்பு வருவதை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தால் அது தவறான விஷயம் அல்ல” என்று பெ. சண்முகம் கூறினார்.

மேலும், ‘தவெக அமைச்சரவை யில் அதிமுக இடம் பெற்றால் இடது சாரிகளின் நிலைபாடு என்ன?’ என்ற கேள்விக்கு, “தவெக அமைச்சரவை யில் அதிமுக பங்கேற்றால், நாங்கள் எங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்வோம் என்பது ஏற்கனவே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். மு. வீரபாண்டியன் பதில்: சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், “சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஒரே நிலை தான் எடுத்திருக்கிறோம்.

மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே, வெளியில் இருந்து நாங்கள் ஆதரவு அளிக் கிறோம்.

ஒன்று மக்கள் தீர்ப்புக்கு மதிப்ப ளிப்பது, இரண்டாவதாக இன்னொரு தேர்தலை திணிக்கக் கூடாது. மூன்றாவ தாக ஆளுநர் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது.

எனவே வெளியில் இருந்து ஆதரவு என்ற மிகச் சரியான அரசியல் நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் ஆதரவே அவர்களுக்குப் போதும்.

இதுகுறித்து முதல்வர் தான் சிந்திக்க வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் ஆதரிப்போம் கொள்கை வழி யில்.

சிலர் சொல்வது போல் நெருக்கடி, குடைச்சல், கல்லடி என்பதெல்லாம் அல்ல.

உழைக்கும் மக்கள், எளிய மக்கள், நாட்டு நலன் இந்த கோரி க்கையைத் தான் முன் வைப்போம். எப்போதும் நாங்கள் உழைக்கும் மக்கள், ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று தான் குரல் கொடுப்போம்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.