தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம்!’ தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்!

29 May 2026, 8:47 pm
‘கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம்!’ தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்!

‘கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம்!’ தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்!

​​​​​​​தஞ்சாவூர், மே 29 - கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டு வதற்கு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.

பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செய லாளர் கோ. சக்திவேல், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் கே. மாசி லாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநில நிலைக்குழு உறுப்பினர் அ. சிம்சன் ஆகிய தலை வர்கள் கண்டன உரையாற்றினர். சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி. மாரிமுத்து, சிபிஐ நாடாளு மன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா, சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க. மாரி முத்து, சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி. சீனி வாசன், சிபிஐ தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் மு. அ. பாரதி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ். கேசவ ராஜ், நாகை மாவட்டச் செயலாளர் சிவகுரு.

பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் அ. சீனி வாசன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ். இளங்கோவன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் தனுஷ் பாண்டியன், நாகை மாவட்டச் செயலா ளர் ஜெ. சிவக்குமார், தஞ்சை மாநகரச் செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசின் சட்ட விரோதமான மேகதாது அணை கட்டுமான நட வடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்; காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை யும், தமிழகத்தின் தண்ணீர் உரிமை யை பாதுகாக்காமல் அலட்சியம் காட்டி வரும் ஒன்றிய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பா ட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங் களைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.