தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குரிமை பறிப்பை முறியடிப்போம்; தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக! தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

1 Oct 2026, 9:47 pm
வாக்குரிமை பறிப்பை முறியடிப்போம்; தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக! தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வாக்குரிமை பறிப்பை முறியடிப்போம்; தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்குக! தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 1 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, வியாழக்கிழமை (அக்.1)தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) எனும் பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடியும்உள்துறை அமைச்சர்அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்தி,நீக்கப்பட்ட உண்மையான வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் தலைவர்கள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான 2023 சட்டத்தை ரத்து செய்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட குழுவே ஆணையர் களை நியமிக்கும் முறையை மீட்டெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

‘இந்தியா போர்க்களமாகும்’ பெ. சண்முகம் எச்சரிக்கை

வடசென்னை மிண்ட் பேருந்து நிலையம் அருகே சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வேம்புலி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தேர்தல் ஆணையமே மோசடியில் ஈடுபட்டால் யாரிடம் முறையிடுவது என்று சூழலில்தான் இந்தப் புகாரை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையர், மோடி, அமித்ஷா ஆகியோருடன் இணைந்து ஜனநாயகத்திற்குச் சமாதி

கட்டும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்ப தாகக் குற்றம் சாட்டிய அவர், ஞானேஷ்குமார் தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் அரசு நீக்க வேண்டும் எனவும், இக்கோரிக்கை நிறைவேறும் வரை இந்தியா போர்க்களமாக மாறும், அதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என எச்சரித்தார். பின்னர் அளித்த பேட்டியில், இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தவெக அதிகமாக கொடுப்பதாக, களத்தில்இருந்து செய்தி வருவதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ —மு. வீரபாண்டியன்

தென்சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம்ஜிஆர் நகர் சந்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர்ஆர். வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.எஸ்ஐஆர் மற்றும் ஞானேஷ்குமார் விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும்கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வீரபாண்டியன் வலியுறுத்தினார். இடைத்தேர்தல் நடைபெறும் இருதொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக அரசியல் பேசாமல் தனிநபர்கள், குடும்பங்கள் குறித்துப் பேசுவதாகவும், கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் அரசியல் பேசுவதாகவும், மூன்று கட்சியினரும் ஓட்டுக்குப் பணம் தரும் குற்றச்செயலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

‘இம்பீச்மென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உ. வாசுகி வலியுறுத்தல்

மத்தியசென்னை சாஸ்திரி பவன் முன்பு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி, சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் வகிதா நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், இல்லையெனில் இம்பீச்மென்ட் (தகுதி நீக்க) நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுகி வலியுறுத்தினார். இந்தியாவை ஜனநாயக சோசலிசக் குடியரசு என்ற தன்மையிலிருந்து இந்து ராஷ்டிரமாக மாற்றும் அரசியல் நோக்கத்தை எதிர்த்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துப் போராடி வருவதாகவும், ஜனநாயகம் பறிபோக விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி அக்டோபர் 6 அன்று இந்தியா அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற முகப்பிலிருந்து தேர்தல்ஆணைய அலுவலகம் நோக்கிப் பேரணி நடத்துவதாக சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்தெரிவித்தார்.

‘முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது’ - கே. பாலகிருஷ்ணன்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே சிபிஎம் மாவட்டசெயலாளர் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ் ணன் கலந்துகொண்டார். பாஜக ஆட்சிக்குவந்த பிறகு தேர்தல்ஆணையம் அதன் கைப்பாவை யாக மாறிவிட்டதாகவும், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள் உள்ளிட்ட பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை இலக்காக்கி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் மூவரில் இரண்டு ஆணையர்களே ஞானேஷ்குமாரின் முறைகேடுகள் குறித்து 14 முறை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்த நிலையில், இவ்வளவு பெரிய மோசடி கண்முன் நடக்கும்போது முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூட ஞானேஷ்குமாரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக அவர் விமர்சித்தார். ‘பாஜக கொள்கை எதிரி’ என எழுத்தில் சொன்னால் மட்டும் போதாது என்றார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் இந்தியா அணிக் கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் பிரம்மாண்டமான போராட்டம் நடைபெறும் எனவும், இந்தியா முழுவதும் கொந்தளிக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்களில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலதுணைச் செயலாளர் நா. பெரியசாமி, சிபிஐ(எம்.எல்.) விடுதலை மாநிலக் குழு உறுப்பினர் கே. சுரேஷ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், எஸ்யுசிஐ, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதி களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தியா அணி மற்றும் ஜனநாயக சக்திகள்ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவதன் மூலம் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என இடதுசாரித்தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.