விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
1 Nov 2026, 2:00 am

விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அண்ணா சிலை எதிரே சிபிஎம், சிபிஐ, சிபிஐ.எம்.எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் காய்கறிகள் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, அக்.31-விண்ணை முட்டும் விலைவாசி உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

அரிசி, சர்க்கரை,பருப்பு,சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை மானியம் விலையில் ரேஷனில் வழங்க வேண்டும். 9 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசியை உடனே வழங்க வேண்டும். ரேஷனில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்று கூறி ரேஷன் முறையை ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.அத்தியாவசிய பண்டங்களை பதுக்கும் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்ட த்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ.எம்எல் ஆகிய இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் சலீம், பெரு மாள், பாலசுப்ரமணியன், ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். போராட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் தலை வர்கள் நாரா. கலைநாதன், விஸ்வநாதன், ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், சீனுவாசன் கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, ராமசாமி, மதிவாணன், சரவணன், ரமேஷ், ஜோதி பாசு, சஞ்சய் சேகரன்,இளவரசி, சுப்பையா, அந்தோணி, எழிலன்,விஜயா உள்ளிட்ட திரளான இடதுசாரி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்தும் ரேசன் திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.