தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் மக்களின் வாழ்க்கை மீது தாக்குதல்! மே 20-மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

16 May 2026, 10:40 pm
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் மக்களின் வாழ்க்கை மீது தாக்குதல்! மே 20-மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் மக்களின் வாழ்க்கை மீது தாக்குதல்! மே 20-மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 16 - பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தியிருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சி கள் சார்பில், மே 20 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (எம்-எல்) லிபரேசன் மாநி லச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகி யோர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மூடப்பட்ட உணவகங்கள்; வேலையிழந்த தொழிலாளர்கள்

பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயுவை கிலோவுக்கு ரூ. 2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறு வனங்கள் அறிவித்திருப்பது மக்க ளின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். இத்தகைய தாக்குதலை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.

ஏற்கெனவே மே 1 முதல் வணிக எரிவாயு சிலிண்டர் விலைகள் செங்குத் தாக உயர்த்தப்பட்டன. உதாரணமாக 19.5 கிலோ சிலிண்டர் விலை 2 ஆயி ரத்து 244 ரூபாயிலிருந்து, 993 ரூபாய் அதிகரிப்போடு 3 ஆயிரத்து 237 ரூபா யாக உயர்த்தப்பட்டது. ஆயிரக்கணக் கான உணவகங்கள் இழுத்து மூடப் படும் நிலையை அது உருவாக்கி யது. இதனால் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

மோடி அரசின் ஒப்புதலுடன் நடந்த விலை உயர்வு

யானை வரும் பின்னே, மணி யோசை வரும் முன்னே என்பது போல இத்தகைய தாக்குதல் வரப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பை பிரத மர் மோடி ஒரு சில நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு விட்டார். பொதுப்போக்குவரத்தில் பயணி யுங்கள், பெட்ரோல், டீசல் பயன் பாட்டை குறையுங்கள் என்றெல்லாம் அறிவுரைகளை பொழிந்தார். ஆகவே, இந்த விலை உயர்வு எண்ணெய் வணிக நிறுவனங்களின் சுயேச்சையான முடிவு அல்ல. ஒன்றிய பாஜக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பே ஆகும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் ஏற்ப டுத்தும் சுழல் விளைவு கடுமையான பாதிப்புகளை எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் ஏற்படுத்தக் கூடிய தாகும். போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி பலசரக்கு, காய்கறி, பழம், பால், மருந்து, நுகர்வுப் பொருள்கள் என எல்லாவற்றின் விலை உயர்வுக் கும் இது வழிவகுக்கும்.

சுமைகள் அனைத்தும் ஏழை- நடுத்தர மக்களுக்கே!

காரணம் வாகனப் போக்குவரத்து கட்டணத்தில் 55 சதவிகிதம் வரை டீசல் செலவினமே ஆக்கிரமிக்கிறது. விவசாயத்தில் டிராக்டர், நீர்ப்பாச னம் போன்ற செலவுகள் மீதும் எதிர் மறைத் தாக்கத்தை உருவாக்கும். 3 சதவிகிதம் பெட்ரோல், டீசல் விலை கள் உயர்ந்தால் அது குறைந்தபட்சம் 15 சதவிகித உயர்வாக சில்லரைப் பணவீக்கத்தில் பிரதிபலிக்கும் என பொருளாதார மதிப்பீடுகள் கூறு கின்றன. இதன் சுமை முழுவதையும் சாதாரண, நடுத்தர மக்களே சுமக்கப் போகிறார்கள் என்பதே இந்த விலை உயர்வின் விபரீதம்.

இதற்கு எதிராக, கிக் மற்றும் செயலி தொழிலாளர்கள் இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள், ஏற்கெனவே தில்லியை விட்டு மூட்டை முடிச்சுக் களோடு சொந்த ஊர்களுக்கு வெளி யேறியதை கண்டு தேசமே திகைத்தது.

கார்ப்பரேட் வரிச் சலுகைகளே காரணம்!

போரும், ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியும் காரணமாக கூறப்படு கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலர்களில் இருந்து 110 டாலர்கள் வரை உயர்ந்திருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் பெட் ரோல், டீசல் விலை குறைக்கப்படவே இல்லை. 2020-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்த போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கூடுதல் வரிகளைப் போட்டு அரசின் கஜானாவை நிரப்பு கிற வேலையை பாஜக அரசு செய் தது. ஆனால், இப்போது சர்வதேச விலைகளை கைகாட்டி மக்களை ஏமாற்ற முனைகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொருளாதார நிகழ்வு மட்டு மல்ல. நெருக்கடிகள் ஏற்படும்போ தெல்லாம் வருவாய் திரட்டல் முயற்சி யில் எளிய மக்களுக்கு இழைக்கப் படும் அரசியல் அநீதியே ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2019-இல் வழங்கப்பட்ட பெரும் வரிச் சலுகை இன்று வரை அதீதமான செல்வக் குவிப்பிற்கு வழி வகுத்துள்ளது.

போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்

போர் ஒருபுறம் உலக மக்களின் நிம்மதியை அலைக்கழிக்கிறது எனில், அரசு தொடுக்கிற பொருளாதாரப் போராக உள்நாட்டிலும் மக்களின் அமைதியை, நிம்மதியை இத்தகைய விலை உயர்வுகள் சீரழிக்கின்றன. எனவே, பெட்ரோலியப் பொருட் கள் அத்தியாவசியமானது என்ற முறை யில் மானியம் வழங்கி இத்தகைய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இடது சாரிக் கட்சிகள் சார்பில் 2026 மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் நலனை முன்னிறுத்தி நடைபெற வுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத் தில் பொதுமக்கள் பெருந்திரளாக பங் கேற்று ஆதரவு நல்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.