தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரிகட்சிகள் ஆர்ப்பாட்டம்

18 May 2026, 10:46 pm
நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரிகட்சிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரிகட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​நாகர்கோவில்,மே.18- ஒன்றிய பாஜக அரசின் டீசல் பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலி யுறுத்தி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, கன்னியாகுமரி மாவட்ட இடதுசாரி கட்சிகளின் ஆலோ சனை கூட்டம் வெட்டூர்ணி மடம் சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. சிபிஐ எம் கட்சியின் மாவட்ட செய லாளர் ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி னார். இதில் சிபிஐ சார்பில் மாவட்ட செயலாளர் சுபாஸ் சந்திரபோஸ், ராஜு, அருள் குமார், செல்வராஜ், சிபிஐ எம் சார்பில் அகமது உசைன், அந்தோணி, மோகன், அருணாசலம் , முன்னாள் எம் பி பெல்லார் மின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசு அண்மையில் உயர்த்தி யுள்ள அநியாய டீசல், பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மே 20 அன்று மாநிலம் முழு வதும் சிபிஐ, சிபிஐ எம், சிபிஐ (எம் எல்) ஆகிய இடது சாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்தில் நாகர் கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு மே 20ம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.