ஒடிசாவில் இடதுசாரி கட்சிகள் கண்டனப் போராட்டம்
26 Sept 2026, 11:24 pm

ஒடிசாவில் இடதுசாரி கட்சிகள் கண்டனப் போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தகுதியுள்ள குடிமக்களின் வாக்கு

ரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து எழுந்துள்ள தீவிர சந்தேகங்களைக் கண்டித்தும் பாஜக ஆளும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டமும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றன.

சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு இடதுசாரி கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,“வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. எனவே, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது,சீரமைப்பது மற்றும் பெயர்களை நீக்குவது ஆகியநடைமுறைகள் முற்றிலும் வெளிப்படையாகவும், நடுநிலையாகவும், சட்டப்பூர்வமாகவும், சரிபார்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நிர்வாகக் கோளாறுகள், மென்பொருள் பிரச்சினைகள், ஆவணங்களில்உள்ள தெளிவின்மை அல்லது வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளைக் காரணம் காட்டி எந்தவொரு தகுதியுள்ள குடிமகனின்வாக்குரிமையையும் பறிக்க முடியாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.