ஏழை ,நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவிலில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
20 May 2026, 9:53 pm

ஏழை ,நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவிலில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 20- ஏழை நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் பெட் ரோல்,டீசல் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரியும் இடது சாரிக்கட்சிகள் சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் குமரி மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலா ளர் டி.சுபாஷ் சந்திர போஸ், சிபிஐ (எம் எல்) மாநிலக்குழு உறுப்பினர் எஸ். எம் .அந்தோணி முத்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசைன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மானியம் வழங்கி விலை உயர்வை திரும்பப் பெறுக! ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

ஆர்ப்பாட்டத்தில் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பேசிய தாவது: பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறி வித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். இதனை இடது சாரிக் கட்சிகள் கண்டிக்கின்றன. ஏற்கெனவே வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் ஆயிரக்கணக்கான உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலை உருவானது. இதனால் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த விலை உயர்வு எண்ணெய் வணிக நிறுவனங்களின் சுயேட்சையான முடிவு அல்ல. ஒன்றிய பாஜக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பே ஆகும். பெட்ரோல், டீசல்விலை உயர்வு போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி பலசரக்கு, காய்கறி, பழம், பால், மருந்து, நுகர்வு பொருள் கள் என எல்லாவற்றின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். மானியம் வழங்கி இத்தகைய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.