தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி இடதுசாரிக் கட்சிகள் தர்ணா
30 Sept 2026, 9:23 pm

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி இடதுசாரிக் கட்சிகள் தர்ணா

நாகர்கோவில், செப்.30-எஸ்ஐஆர் என்கிற பெயரில் தகுதியான சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு காரணமான, மக்களின் நம்பிக்கையை இழந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாகர்கோவிலில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன், சிபிஐ மாவட்ட செயலாளர் றி.சுபாஷ் சந்திரபோஸ், சிபிஐ (எம்எல்) மாநில நிலைக்குழு உறுப்பினர் எஸ்.எம்.அந்தோணிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மூத்த தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முகமது துவக்கிவைத்து பேசினார்.

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி நிறைவுரையாற்றினார். மூத்த தோழர் என்.முருகேசன் ,சிபிஎம்மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழுஉறுப்பினர்கள் , பெண்கள் உள்படபலர் பங்கேற்றனர்.