தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தியதை கண்டித்து உடுமலையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
8 Dec 2025, 4:39 pm
<p><strong>தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தியதை கண்டித்து உடுமலையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை,டிச.8- ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து தொழி லாளர்களையும், மக்களையும் பாதுகாப் போம் என்ற முழக்கத்துடன் இடதுசாரி கட்சி கள் திங்களன்று உடுமலை நகராட்சி அலுவ லகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரச் செயலாளர் தண்டபாணி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், ஒன்றிய பாஜக அரசு 44 தொழிலாளர் கள் சட்டங்களை 4 சட்ட தொகுப்பாக மாற்றி யதை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய அர சின் தொழிலாளர் துறை அறிவித்துள்ள ஷிரம் சக்தி நிதி 2025 வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். மாநில அரசுகளை மீறி புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், மதுசூதனன், கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங் கம், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வடி வேல், ஒன்றியச் செயலாளர்கள் சசிகலா, ஜெகதீசன், மலைக்கமிட்டி செயலாளர் செல் வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, சுப்பிரமணியம், உடுமலை தாலுகா செயலாளர் சித்ரா ரண தேவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சதிஸ்குமார், நிர் வாகி விடுதலை மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மாநில நிர்வாகி மீனாட்சி சுந்தரம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசு இயற்றிய தொழிலாளர் விரோத சட் டத்தை திரும்பப்பெறக்கோரி கண்டன முழுக் கங்கள் எழுப்பினர். தாராபுரம் தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பு திங் களன்று காலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் மின் னல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போக்கு வரத்து கிளைச் செயலாளர் என்.முத்துச்சாமி, தாராபுரம் தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் பி.பொன்னுசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் தராபுரம் நகர ஏ கிளை செயலாளர் கே.மேகவர்ணம், மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் ஆகியோர் பங் கேற்று நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களின் பாதகமான அம்சங்கள் குறித்து கண் டன உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.</p>
