தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் அடக்குமுறை: கண்டன இயக்கங்கள் நடத்த இடதுசாரி கட்சிகள் அறைகூவல்!

10 Oct 2026, 5:01 pm
தில்லியில் அடக்குமுறை: கண்டன இயக்கங்கள் நடத்த இடதுசாரி கட்சிகள் அறைகூவல்!

தில்லியில் நடைபெறும் அடக்குமுறை மற்றும் கைதை கடுமையாக கண்டித்துள்ள இடதுசாரி கட்சிகள் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தலைநகர் தில்லியில் காவல்துறை, துணை ராணுவப்படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்த பின்புலத்தில் கைது வேட்டையும், தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் - வெகுஜன அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்து இருந்தன.

தில்லிக்கான 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35000 காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரை கூட செவிமடுக்கப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் தில்லியில் கைதாகி உள்ளனர். இடதுசாரி வாலிபர், மாணவர், அமைப்புகளின் தலைவர்கள், முன்னணி ஊழியர்களும் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில மணி நேரங்களாக காவல் வாகனத்தில் வைத்துக் கொண்டே சுற்றி வருகிறார்கள்.

ஜந்தர்மந்தர் பகுதியில் ஒன்றிய அரசின் தில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர். கட்சி, வெகுஜன அமைப்பு அலுவலகங்கள் துணை ராணுவப் படையாலும், ஒன்றிய அரசின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஜனநாயக மறுப்பின் உச்சகட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.

இந்த அடக்குமுறை, கைதைக் கண்டித்தும், ஞானேஷ் குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.