தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திசை திருப்புவது யார்?

29 Sept 2026, 8:08 pm
திசை திருப்புவது யார்?

திசை திருப்புவது யார்?

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக்கோரி இடதுசாரிக் கட்சிகள் நாடுதழுவிய கிளர்ச்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளை தன்னுடைய குறுகிய அரசியல் நலனுக்கு பயன்படுத்தி வருவது கண்கூடு. எஸ்ஐஆர் எனப்படும்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் சக தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களைக் கூட மதிக்காமல் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்பது வெளிப்படையான உண்மை.

இந்த பின்னணியில்தான் நரேந்திரமோடி அரசால் நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமாரை நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்தப் பிரச்சனையில் தமிழக வெற்றிக்கழகம் தன்னுடைய நிலைபாட்டைதெளிவுபடுத்த வேண்டும். அமைச்சர் ராஜ்மோகன் அளித்துள்ள பேட்டியில், எஸ்ஐஆரை தவெக எதிர்க்கிறது என்றும், கடந்த காலத்திலும், எதிர் காலத்திலும் இந்த நிலைப்பாடு தொடரும்என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரை மட்டும் மாற்றுவது தீர்வு அல்ல என்றும், எஸ்ஐஆர் தொடர்பான பிரச்சனையை தனிநபர்மாற்றத்துடன் முடித்து விட முடியாது என்றும்திசை திருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது என்றும் குழப்பமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்த அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரிக் கட்சிகளும் ஞானேஷ் குமாரைபதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் ராஜ்மோகன் இதைஒரு தனிநபர் பிரச்சனையாகவும், திசைதிருப்பும் வேலை என்றும் கூறுவது பொருத்தமல்ல.

ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் தொடர்பாக ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது குறித்து 14 முறை அதிகாரப்பூர்வ ஆட்சேபணை தெரிவித்ததாக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.எஸ்ஐஆர் என்கிற பெயரில் தகுதியான சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டுள்ளன. ஞானேஷ் குமார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில்,தவெகவினால் சித்தாந்த எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பாஜக தலைமையிலான அரசின் கைப்பாவையாகசெயல்பட்ட ஞானேஷ் குமாரின் பிரச்சனையை தனிநபர் பிரச்சனையாக தவெக கருதுவது அபத்தமானது. இது நாட்டின் ஜனநாயகம், குடிமக்களின்வாக்குரிமை சம்பந்தப்பட்ட ஒன்று. தவெக தனதுநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.