தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; எஸ்ஐஆரை நிறுத்த வேண்டும்! இன்று முதல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்!

25 Sept 2026, 11:07 pm
ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; எஸ்ஐஆரை நிறுத்த வேண்டும்! இன்று முதல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்!

ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; எஸ்ஐஆரை நிறுத்த வேண்டும்! இன்று முதல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்!

புதுதில்லி, செப். 25 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தமான (SIR) நடவடிக்கையை நிறுத்த வேண்டும், தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும்வாக்குரிமை வழங்க வேண்டும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.இதற்காக செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நாடு தழுவிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா, சிபிஐ(எம்-எல்) லிபரேசன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன், ஆர்எஸ்பிபொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர், செப். 23 அன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டசெய்தியை குறிப்பிட்டு, கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், மீண்டும் சேர்த்தல் மற்றும் SIR தொடர்பான முடிவுகளில்குறைந்தது 14 முறை ஆட்சேபணைகளைப் பதிவு செய்ததையும், தங்கள் ஒப்புதல் இல்லாமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கவலை தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், வாக்காளர் தரவுத்தளம் மையப்படுத்தப்படுவதையும், மாநில மற்றும் தொகுதி அளவிலான அதிகாரிகளின் அணுகல் பறிக்கப்பட்டதையும், கோவாவில் மென்பொருள் கட்டுப்பாடுகளால் 97 தகுதியான வாக்காளர்களைப் பதிவு செய்யமுடியாத நிலையையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் சுதந்திரமும் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்குக்குறைந்துள்ளன. அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்ததற்கும், நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்ததற்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.எனவே, இதனால் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் மற்றும் அனைவருக்கும் வாக்குரிமை ஆகிய ஜனநாயகத்தின் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஞானேஷ்குமார் பதவி நீக்கப்படவேண்டும்; எஸ்ஐஆர் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் வழிமொழிந்த படி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்என்று வலியுறுத்தியுள்ளனர்.இதனை வலியுறுத்தி, பகத்சிங் பிறந்த நாளையொட்டி செப். 28 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும்போராட்டங்களை நடத்துமாறு கட்சிக் கிளைகளைக் கேட்டுக் கொண்டுள்ள அவர்கள், பாஜக அல்லாதமதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், குடிமக்கள் பங்கேற்கவும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.