தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணைய சீர்திருத்தத்திற்காக நாடு தழுவிய போராட்டம் இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

24 Sept 2026, 8:47 pm
தேர்தல் ஆணைய சீர்திருத்தத்திற்காக நாடு தழுவிய போராட்டம்  இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

தேர்தல் ஆணைய சீர்திருத்தத்திற்காக நாடு தழுவிய போராட்டம்

இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

புதுதில்லி, செப். 23 -இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் புதுதில்லியில் ஆலோசித்து,தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டப் பிரச்சாரத்தைஅறிவித்துள்ளன.

செப்டம்பர் 24 வியாழனன்று இக்கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்எல்) விடுதலையின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூன்று கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

செப்.26 முதல் அக்.2 வரைநாடு தழுவிய பிரச்சாரம்

அப்போது, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்ட் பிளாக் ஆகியவற்றையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இருப்பதாகவும், செப்.26 முதல் அக்.2 வரை ஒரு வார கால நாடு தழுவிய போராட்டப் பிரச்சாரத்தை மூன்று கட்சிகளும்நடத்தவுள்ளதாகவும் பேபி தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில் புரட்சியாளர் பகத்சிங் நினைவு நாளான செப்.28ம், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்.2-ம் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.விரிவான ஒற்றுமைக்கு அழைப்புதேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற இந்தப் போராட்டத்தில், பாஜக, அதன் தேசிய ஜனநாயகக்கூட்டணி நட்பு கட்சிகளைத் தவிர்த்து, அனைத்து தேசிய, மாநில அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுவதாக பேபி தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூகஅமைப்புகள், சிவில் சமூக இயக்கங்கள், பாடகர் டி.எம்.கிருஷ்ணா போன்ற பொதுச் சிந்தனையாளர்கள்,கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அனைவரும் இணைந்த ஒரு விரிவான தளத்தை உருவாக்கமுயற்சிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மையைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின்உயிர்நாடி எனவும் அவர் வலியுறுத்தினார். தேர்தல்கள் கவிழ்க்கப்பட்டால் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்என்று எச்சரித்தார் அவர்.

“ஆணையத்தின் நம்பகத்தன்மையே நெருக்கடியில்” - து.ராஜா

தேர்தல் ஆணையம் பெரும் நெருக்கடி யை எதிர்கொள்வதாகவும், தற்போதைய ஆணையர்கள் மட்டுமின்றி முன்னாள் ஆணையர்களும் கேள்விகள் எழுப்பி வருவதாகவும் து.ராஜா தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதே தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும், ஆனால் எஸ்ஐஆர் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஏழை, எளிய மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்குப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும் என்று சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் கோரியுள்ளதாகவும், அவர் விலகாவிட்டால்பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று முக்கிய கோரிக்கைகள்

அரசு இதுவரை கவனிக்காமல் உள்ள, ஞானேஷ் குமார் மீதான பதவி நீக்கக் கோரிக்கையை உடனடியாகக் கையிலெடுக்க வேண்டும் என்பதே தமது முதல் கோரிக்கை எனவும், எஸ்ஐஆர் செயல்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே இரண்டாவது எனவும், தவறாக நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமையையும் மீட்டு அளிக்க வேண்டும் என்பதே மூன்றாவது கோரிக்கை எனவும் து.ராஜா தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் கோரிக்கைதிருத்தப்பட்ட, சிக்கலான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் ஏற்கெனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் அந்தத் தேர்தல்களின் செல்லுபடியே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும், எனவே மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரிக்கை எழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் புறக்கணித்து கொண்டுவரப்பட்ட தற்போதைய தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை ரத்து செய்து, ஆணையத்தின்நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பு உத்தரவாதம் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிப்படுத்தல் - ஆணையத்தின் பாதுகாப்பற்ற பதில்

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை என்பதே முதல் முக்கியத் தகவல் எனவும்,மாறாக அது ‘ஒரு பகுதி சித்திரம் மட்டுமே’ எனக் கூறி பாதுகாத்துக்கொள்ள முயன்றுள்ளதாகவும் து.ராஜாகுற்றம்சாட்டினார். வாக்காளர் பட்டியலே சீரழிக்கப்பட்ட, சமரசம் செய்யப்பட்ட நிலையில், மென்பொருள்மையப்படுத்தலும் கையாளுதலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல மாநிலங்களில் தேர்தல் ‘வெற்றிகரமாக’ நடத்தப்பட்டதாகக் கூறுவதற்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஆண்டில்சுமார் 13 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிட்டிருப்பது உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் நடந்திராதமிகப்பெரும் ஊழல் எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தில்லியில் கூட்டு போராட்டம், தேசிய அளவிலான ஒன்றுகூடல்

தில்லி, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் செயல்பாட்டின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும், மாணவர் வாக்காளர்கள் உள்ளிட்ட தவறாகநீக்கப்பட்டோரின் வாக்குரிமையை மீட்பதற்கான பணிகள் தொடருவதாகவும் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்தார். பகத்சிங் நினைவு தினமான செப்.28-அன்று தில்லியில் கூட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும், அரசியல் கட்சிகள், சிவில் சமூகஅமைப்புகள், பொதுச்சிந்தனையாளர்கள் அடங்கிய தேசிய அளவிலான ஒன்றுகூடல் ஒன்றை நடத்தும் சாத்தியத்தையும் ஆராய்ந்துவருவதாக அவர் தெரிவித்தார். தேர்தல் ஜனநாயகத்தையும் உலகளாவிய வாக்குரிமையையும் காக்க மிகப்பெரியஅளவிலான மக்கள் அணிதிரட்டலை நடத்துவோம் எனவும், தேர்தல் ஆணையர் பதவி விலகியாக வேண்டும்,நாட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.